அபர்ணா நாயர்
அபர்ணா நாயர் | |
---|---|
பிறப்பு | 30 நவம்பர் 1989 தேஞ்ஞிப்பாலம், மலப்புறம், கேரளம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | கொச்சி, புனித தெரசாள் கல்லூரி |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2007 – தற்போது வரை |
அபர்ண நாயர் (Aparna Nair) (பிறப்பு 30 நவம்பர் 1989) ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் மலையாளத் திரைப்படத்துறையில் தோன்றி வருகிறார்.
சுயசரிதை
அபர்ணா, கேரளாவின் மலப்புறம் மாவட்டத்திலுள்ள தேஞ்ஞிப்பாலம் புனித பால் மேல்நிலைப்பள்ளியிலும், பின்னர், கொச்சி, செயின்ட் தெரசா கல்லூரியிலும் பயின்றார். அ. க. லோகிததாசின் இயக்கத்தில் வெளியான "நிவேதயம்" என்ற படம் மூலம் இவர் அறிமுகமானார். [1] பிறகு, "சாயாமுகி" என்ற படத்தில் பாஞ்சாலியை சித்தரித்தார். இதில் மோகன்லால் மற்றும் முகேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். [2] 2009 ஆம் ஆண்டு திரைப்படமான மேகதீர்த்தத்தில் மணிகுட்டனுக்கு இணையாக கவியூர் பொன்னம்மாவின் சிறு வயதான பாத்திரத்தில் நடித்தார். கயம் என்ற படத்தில் நடிகர் பாலாவின் இணையாக நடித்தார். [3] 2010 இல், இவர் காக்டெய்லில் நடித்தார். இவரது அறிமுகம் தமிழ் அறிமுக இயக்குநர் கே.மகேசுவரன் இயக்கிய "எதுவும் நடக்கும்" என்ற படத்தின் மூலம் தமிழகத் திரைப்படத்துறையில் நுழைந்தார். [4]
பின்னர் இவர் பியூட்டிஃபுல் படத்தில் நடித்ததற்காக பாராட்டுக்களைப் பெற்றார். [5] அடுத்து சங்கர் இயக்கிய ஸ்ட்ரீட்லைட் என்பதில் நடித்தார். அதில் இவர் நான்கு வேடங்களில் நடித்திருந்தார். [6] மல்லு சிங், தட்டத்தின் மராயத்து போன்ற படங்களிலும், ஜோஷியின் இயக்கத்தில் "ரன் பேபி ரன்" என்ற படத்திலும் நடித்தார். [7]
குறிப்புகள்
- ↑ "Aparna Nair, beautiful star on the horizon". Deccan Chronicle. Archived from the original on 9 January 2012. பார்க்கப்பட்ட நாள் 1 January 2013.
- ↑ "Upbeat". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 1 January 2013.
- ↑ "ഹിറ്റുകളുടെ കൂട്ടുകാരി , Interview - Mathrubhumi Movies" பரணிடப்பட்டது 17 திசம்பர் 2013 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ "APARNA NAIR". Archived from the original on 27 January 2013. பார்க்கப்பட்ட நாள் 1 January 2013.
- ↑ "Aparna Nair, beautiful star on the horizon". Deccan Chronicle. Archived from the original on 9 January 2012. பார்க்கப்பட்ட நாள் 1 January 2013.
- ↑ Admin. "Aparna Nair" பரணிடப்பட்டது 17 சனவரி 2013 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ "Upbeat". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 1 January 2013.