சீ. முத்துசாமி
Jump to navigation
Jump to search
சீ. முத்துசாமி
இயற்பெயர்/ அறியும் பெயர் |
சீ. முத்துசாமி |
---|---|
பிறந்ததிகதி | பிப்ரவரி 22 1949 |
அறியப்படுவது | எழுத்தாளர் |
சீ. முத்துசாமி (பிறப்பு: பிப்ரவரி 22 1949) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர், ஆசிரியராவார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
1973 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், நாவல், புதுக் கவிதைகள் போன்றவற்றை எழுதிவருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
நூல்கள்
- "இரைகள்" (சிறுகதைத் தொகுப்பு, 1978);
- "விதைகள் பாலைவனத்தில் முளைப்பதில்லை" (குறுநாவல், 1980);
- "மண்புழுக்கள்" (நாவல், 2006).
பரிசில்களும், விருதுகளும்
- "இரைகள்" சிறுகதைக்காகத் தமிழகத்தின் குமுதம் இதழின் சிறுகதைப் போட்டியில் (1977) முதல் பரிசு இக்கதை தமிழகத்தின் இலக்கியச் சிந்தனையின் மாதாந்திரச் சிறந்த சிறுகதையாகவும் (நவம்பர் 1977) தேர்வு பெற்று பின்னர் தொகுப்பில் இடம் பெற்றது.
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மாதாந்திரச் சிறுகதைத் தேர்வில் பலமுறை பவுன் பரிசுகள்
- செம்பருத்தி இதழின் குறுநாவல் போட்டியில் முதல் பரிசு (2002).
- 2005இல் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், அஸ்ட்ரோ தொலைக்காட்சி, மலேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்திய நாவல் போட்டியில் இவரது "மண்புழுக்கள்" நாவல் முதல் பரிசு பெற்றது.
- 2017ம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதைப் பெறுகிறார்[1].
உசாத்துணை
- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் சீ. முத்துசாமி பக்கம் பரணிடப்பட்டது 2012-01-14 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
- ↑ "விஷ்ணுபுரம்விருது விழா 2017". பார்க்கப்பட்ட நாள் 20 December 2016.