மதுரைச் சுள்ளம் போதனார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மதுரைச் சுள்ளம் போதனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 215.

சுள்ளம் என்பது மதுரையின் ஒரு பகுதியாகச் சங்ககாலத்தில் விளங்கியது.

கொடுமுடி அவ்வலை - கோட்சறா வேட்டம்

பாடல் சொல்லும் செய்தி

  • திணை - நெய்தல்

நெய்தல் நிலத் தலைவன் பகலில் வந்து நெய்தல் நிலத் தலைவியைத் துய்த்துச் செல்கிறான். பகலில் வரலாமே! திருமணம் செய்துகொண்டு அடையலாமே! (பகலில் மறைந்து மறைந்து ஏன் துய்க்கவேண்டும்?) என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.

மாலை

பகல்கெழு செல்வன்(கதிரவன்) குணகடலில் தோன்றிக் குடமலையில் மறையும் காலம்.

மாலையில் மகளிர்

மகளிர் வீட்டில் விளக்கு வைத்து மாலைவிழாக் கொண்டாடுவர்.

மாலையில் பரதவர்

கொழுப்பில் எரியும் சுடர்விளக்கைத் திமிலில் வைத்துக்கொண்டு கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்வர். அந்த விளக்குகள் வானத்தில் பூத்திருக்கும் மீன்கள் போலக் கடலில் தோன்றும்.

பாடல் தலைவியின் தந்தை

கொடுமுடி வலையுடன் மீன் பிடிக்கக் கடலுக்குள் சென்ற தந்தை தன் வேட்டையில் சுறாமீன் கிடைத்தால் ஒழிய வீடு திரும்பமாட்டான்.

தந்தை இல்லாத தக்க சமயம். இரவில் தங்கிச் செல்லலாம் என்கிறாள் தோழி.

தங்கின் எவனோ தெய்ய

தங்கின் எந்தக் குற்றமும் வந்துவிடாது - என்பது ஒரு பொருள்.
இரவில் தங்குவது ஏன்? (குறமாகும் - என்பது மற்றொரு பொருள்)