அல்பர்ட் பீரிசு
சேர் பட்டியபதிரென்னஹெலாகே அல்பர்ட் பிரெட்ரிக் பீரிசு (Pattiyapathirennehelage Albert Fredrick Peries, 12 மே 1905 - 21 செப்டம்பர் 1967) இலங்கையின் 5வது, மற்றும் 10வது நாடாளுமன்ற சபாநாயகர் ஆவார். துணை சபாநாயகராகப் பணியாற்றிய இவர் அல்பிரட் பிரான்சிஸ் மொலமூர் இறந்ததை அடுத்து சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சேர் அல்பர்ட் பீரிஸ் Albert Peries | |
---|---|
இலங்கை நாடாளுமன்றத்தின் 4வது சபாநாயகர் | |
பதவியில் 13 பெப்ரவரி 1951 – 18 பெப்ரவரி 1956 | |
பிரதமர் | டி. எஸ். சேனநாயக்கா டட்லி சேனாநாயக்க ஜோன் கொத்தலாவலை |
முன்னவர் | ஏ. எஃப். மொலமூர் |
பின்வந்தவர் | எச். எச். எஸ். இசுமாயில் |
இலங்கை நாடாளுமன்றத்தின் 6வது சபாநாயகர் | |
பதவியில் 5 ஏப்ரல் 1965 – 21 செப்டம்பர் 1967 | |
பிரதமர் | டட்லி சேனாநாயக்க |
முன்னவர் | ஹியூ பெர்னாண்டோ |
பின்வந்தவர் | சேர்லி கொரெயா |
நாத்தாண்டியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1952 – ? | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | நாத்தாண்டியா, வடமேல் மாகாணம், இலங்கை | 12 மே 1905
இறப்பு | செப்டம்பர் 21, 1967 | (அகவை 62)
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
இவர் புத்தளம் மாவட்டம் நாத்தாண்டியா தேர்தல் தொகுதியில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்,[1][2]
கொழும்பு புனித யோசேப்பு கல்லூரியில் கல்வி கற்றவர். நாட்டுக்கு ஆற்றிய சேவைக்காக சேர் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.[3] இவரது நினைவாக வென்னப்புவையில் உள்ள விளையாட்டரங்கம் ஒன்றுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
- ↑ "Molamure is elected Speaker of First Parliament". Sundaytimes.lk. பார்க்கப்பட்ட நாள் 30 December 2013.
- ↑ Kurera, S. K. J. "18th Death Anniversary of former Speaker Hugh Fernando today". Island.lk. Archived from the original on 30 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 30 December 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Epasinghe, Premasara. "Former Speaker Sir Albert F. Peries was a versatile Josephian sportsman". Archived from the original on 31 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 30 December 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)