அவன் அவள் அது

அவன் அவள் அது (Avan Aval Adhu) 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், லட்சுமி, ஸ்ரீபிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1] இது வாடகைத்தாய் கருவுருதல் குறித்த கதையைக் கொண்டுள்ளது இது சிவசங்கரியின் ஒரு சிங்கம் முயலகிறது புதினத்தை என்ற கதையை அடிப்படையாகக் கொண்டது.[2][3] இக்கதைக்கு விசு திரைக்கதை அமைத்தார்.[4] இப்படம் 1980 ஏப்ரல் 11 அன்று வெளியானது.[5]

அவன் அவள் அது
இயக்கம்முக்தா சீனிவாசன்
தயாரிப்புஎஸ். சுந்தர்
(மாயா ஆர்ட்ஸ்)
கதைசிவசங்கரி
திரைக்கதைவிசு
வசனம்விசு
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவகுமார்
லட்சுமி
ஸ்ரீபிரியா
வெளியீடுமே 14, 1980
நீளம்3991 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

இசை

இப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்தார். பாடல் வரிகளை கண்ணதாசன் எழுதினார்.[6]

பாடல் பாடகர்(கள்)
"அந்த நாள் முதற்கொண்டு" எல். ஆர். ஈஸ்வரி, மனோரமா
"இல்லம் சங்கீதம் அதில் இராகம்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம்
"கஸ்தூரி திலகம் லா லால பால்கே" வாணி ஜெயராம்
"மார்கழி பூக்களே இளம் தென்றளே" டி. எல். மகராஜன், வாணி ஜெயராம்

வரவேற்பு

மூலக்கதையில் இருந்து குறிப்பிடத்தக்க வகையில் படத்தின் கதை வேறுபட்டிருந்தாலும், திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.[7] கல்கியின் காந்தன் படத்தின் பரபப்பையும் விழுமியங்களையும் பாராட்டினார்.[8]

மேற்கோள்கள்

  1. "அவன் அவள் அது - படத்தில் வாடகைத்தாய் வேடத்தில் ஸ்ரீபிரியா". மாலை மலர். 2 அக்டோபர் 2018. பார்க்கப்பட்ட நாள் 1 அக்டோபர் 2020.
  2. சுதாங்கன் (11 December 2017). "1980ம் வருடம் வெளியான படங்கள் நூற்றுக்கும் மேலே!". தினமலர். Nellai. Archived from the original on 4 August 2019. பார்க்கப்பட்ட நாள் 19 October 2019.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  3. சுதாங்கன் (21 May 2016). "பார்த்தது". தினமலர். Nellai. Archived from the original on 4 August 2019. பார்க்கப்பட்ட நாள் 19 October 2019.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  4. "Sivakumar pens down emotional note for his friend, Visu". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 23 March 2020. Archived from the original on 10 January 2021. பார்க்கப்பட்ட நாள் 7 January 2021.
  5. "Avan Aval Adhu (1980)". Screen4Screen. Archived from the original on 4 October 2021. பார்க்கப்பட்ட நாள் 4 October 2021.
  6. "Avan Aval Athu Tamil Film Super 7 EP Vinyl Record by M.S.Viswanathan". Mossymart. Archived from the original on 4 October 2021. பார்க்கப்பட்ட நாள் 4 October 2021.
  7. Ramesh, Neeraja (17 October 2019). "When novel idea works in cinema". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 3 November 2019. பார்க்கப்பட்ட நாள் 19 October 2019.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அவன்_அவள்_அது&oldid=30281" இருந்து மீள்விக்கப்பட்டது