அ. பத்துமலை
அ. பத்துமலை (பிறப்பு சூன் 17 1949) மலேசிய எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர், ஏ. இராதா பத்துமலை எனும் புனைப்பெயரில் அறியப்பட்டவர்.
எழுத்துத் துறை ஈடுபாடு
1969 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபாடுகாட்டி வருகின்றார். அதிகமாக சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள் முதலியவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
நூல்கள்
- "யாரோ வருவார்" (சிறுகதைத் தொகுப்பு).