இரவிதாசன் (கவிஞர்)
இரவிதாசன் (Ravidasan) என்பவர் ஓர் எழுத்தாளரும், கவிஞரும் ஆவார்.
வாழ்க்கைச் சுருக்கம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கடலூரில் முத்து மற்றும் நீலாவதி தம்பதியினருக்கு 1975 மே 26 அன்று மகனாகப் பிறந்தார். இவருக்கு இந்திராணி தேவராஜ் என்ற சகோதரியும், சந்திரன், கண்ணப்பன் என்ற இரண்டு சகோதரர்களும் உள்ளனர். இவர் உமா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
படைப்புகள்
புதுக்கவிதை நூல்கள்
- இரவைத் தேடும் நிலவுகள் (1992)
- நிர்வாணப் பூக்கள் (1995)
- தமிழ்க்கடலின் ஓரத்தில்
- தீத்துண்டுகள்
மரபுக்கவிதை நூல்கள்
- தீர்ப்பைத் திருத்திய தீர்ப்புகள்
- இது கவிதையல்ல
- இமயம் இடையளவு
- மாமேதை மகாகாவியம்
நூல்கள்
- வெற்றி வெளியே இல்லை
- இளைஞர் வேதம்
- ஏன் வேண்டும் இடஒதுக்கீடு
- காலத்தை வென்ற கலைஞர்
- ஒரு கிராமத்து ராஜா
- பண்டிதரும் பாரதியும்
விருதுகள்
- உவமைக்கவிஞர் சுரதா அவர்களால் வழங்கப்பட்ட "கவிதை முதல்வர்" விருது
- முனைவர் வா.செ. குழந்தைசாமி அவர்களால் வழங்கப்பட்ட கவிவாணர் விருது
- கவிஞர் மல்லை மணிவாசகம் அவர்களால் வழங்கப்பட்ட "வெண்பா வேந்தன்" விருது
- பாரதிதாசன் விருது
- கண்ணதாசன் விருது
- சுரதா விருது