உனக்குப் படிக்கத் தெரியாது (நூல்)
உனக்குப் படிக்கத் தெரியாது என்ற தமிழ் நூல் 2001 இல் கமலாலயன் அவர்களால் எழுதப்பட்டது.
நூலாசிரியர் | கமலாலயன் |
---|---|
நாடு | இந்திய ஒன்றியம் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | வாசல் |
வெளியிடப்பட்ட நாள் | செப்டம்பர் 2011 |
ஊடக வகை | அச்சு நூல் |
பக்கங்கள் | 96 |
இந்த நூல் கறுப்பினக் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்பட்டதை விவரித்துள்ளது |
நூல் சுருக்கம்
புத்தகம் ஒரு சிறு பெண்ணுடன் (மேரி மெக்லியோட் பெத்யூன்)[1] வாழ்க்கை நெடுக பேசிக் கொண்டே வருகிறது. அந்தப் புத்தகம் சிறு வயதில் அவளிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம். கறுப்பினத்தவருக்கு[2] கல்வி மறுக்கப்பட்டிருந்த சமூகத்தில் உனக்குப் படிக்கத் தெரியாது என்று தன் நெஞ்சில் அடிவாங்கிய ஒரு பெண் கறுப்பினக் குழந்தைகளுக்காக ஒரு பள்ளியை உருவாக்கியே தீருவது என்று கனவுகளுடன் நடக்கிறாள். உலகெங்கும் எங்கெங்கோ மூலைகளில் சிதறிக் கிடைக்கும் கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களின் குரல் மேரியுடையது. காற்றில் அலையும் தீபச்சுடரை கையால் அணையிட்டு காப்பது போல தன் பள்ளியை (பெத்யூன் குக்மென் கல்லூரி)[3] பார்த்து பார்த்து வளர்க்கும் ஒரு பெண்ணின் கதை, கறுப்பின சமூகத்தின் கதையாகயும் விரிகிறது.