கடுவன் இளமள்ளனார்
கடுவன் இளமள்ளனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 150.
பாடல் தரும் செய்தி
இது மருதத் திணைப் பாடல்.
பரத்தை ஒருத்தி தலைவனை ஏளனப்படுத்தி இவனுடைய பாணனிடம் பேசுகிறாள்.
உன் தலைவனைப் பார்த்தால் எனக்குச் சிரிப்பு வருகிறது. இவன் என்னிடம் வந்து நீ 'என்னலும்' (என்ன சொன்னாலும்) பிரியமாட்டேன் என்கிறான்.
இவன் தான் அரசனிடம் பெற்ற தாரையும் கண்ணியையும் என்னிடம் காட்டித் தன் பெருமையைக் கூறுகிறான்.
ஒருமுறை என் தாய் சினம் கொண்டு கணுக்களை உடைய மூங்கில் கோலைக் காட்டி அவனை விரட்டியதை நினைத்தாலே சிரிப்பு வருகிறது.
வழுதி அரசன் யானைப்படையைக் கொண்டு பல போர்களில் வெற்றி கண்டான். இவன் கோட்டைக்குச் சென்று இவனைத் தொழுது இந்தத் தாரும் கண்ணியும் பெற்றான் போலும்!