காக்கிசட்டை

காக்கிசட்டை (Kaakki Sattai) 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராஜசேகரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், அம்பிகா மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 175 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது.[1][2]

காக்கிசட்டை
இயக்கம்ராஜசேகர்
தயாரிப்புஜி.தியாகராஜன்,
வி.தமிழ்அழகன்
கதைசத்யா மூவிஸ் குழு
இசைஇளையராஜா
நடிப்புகமல்ஹாசன்
அம்பிகா
மாதவி
சத்யராஜ்
ஒளிப்பதிவுவி. ரங்கா
படத்தொகுப்புகே. ஆர். கிருஷ்ணன்
விநியோகம்சத்யா மூவிஸ்
வெளியீடு11 ஏப்ரல் 1985
ஓட்டம்143 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படம் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் டிஜிட்டல் வடிவில் மீண்டும் வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் இந்தி மொழியில் குரு எனும் பெயரில் மிதுன் சக்கரவர்த்தி, ஸ்ரீதேவி நடிப்பில் 1989 ஆம் ஆண்டில் மீண்டும் எடுக்கப்பட்டது.

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

எண். பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 "கண்மணியே பேசு" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி புலமைப்பித்தன்
2 "நம்ம சிங்காரி சரக்கு" எஸ். பி. பாலசுப்பிரமணியம் வாலி
3 "பூ போட்ட தாவணி" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி அவினாசி மணி
4 "வானிலே தேனிலா" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி நா. காமராசன்
5 "பட்டுக் கன்னம்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா முத்துலிங்கம்

மேற்கோள்கள்

  1. "மறக்க முடியுமா? - காக்கி சட்டை". தினமலர். 15 சூலை 2020. https://m.dinamalar.com/cinema_detail.php?id=89650. பார்த்த நாள்: 15 சூலை 2020. 
  2. "பாட்டு, ஆக்ஷன், கமல்... ஆனா ஹைலைட் அந்த 'தகடு தகடு'தான் - 'காக்கி சட்டை' வெற்றி பெற்றது எப்படி?". ஆனந்த விகடன். 21 செப்டம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 21 செப்டம்பர் 2020.
  3. "'ஜாக்ஸன் துரை'யாக நடித்த பழம்பெரும் திரைப்பட நடிகர் சி.ஆர்.பார்த்திபன் மறைவு". இந்து தமிழ். 26 சனவரி 2021. பார்க்கப்பட்ட நாள் 21 மே 2021.

வெளி இணைப்புகள்

"https://wiki1.tamilar.wiki/index.php?title=காக்கிசட்டை&oldid=32061" இருந்து மீள்விக்கப்பட்டது