காமமே காதலாகி

காதல், ஏமாற்று, துரோகம், கோபம், துக்கம், இயலாமை, அதீத நம்பிக்கை என்கின்ற உணர்ச்சிகளில் கொந்தளித்து, தனது வாழ்வை அழித்துக் கொண்ட ஒருவனை இந்த நாவலில் நீங்கள் பார்க்கலாம். மீதி உங்கள் சுவைப்பிற்கு.

காமமே காதலாகி
காமமே காதலாகி
நூலாசிரியர் இ. தியாகலிங்கம்
பதிப்பாசிரியர் இ. தியாகலிங்கம்
முதற் பதிப்பு
குரல்
கொடுத்தவர்
பிரிதா
உண்மையான
தலைப்பு
காமமே காதலாகி
செயற்பாட்டிலுள்ள
தலைப்பு
காமமே காதலாகி
நாடு நோர்வே
மொழி தமிழ்
வெளியீட்டு
எண்
1
பொருண்மை குடும்ப வாழ்க்கை
வெளியிடப்பட்டது Sep 30, 2016
முதலாவது பதிப்பு
ஊடக
வகை
புத்தகம், ஒலிப்புத்தகம்
பக்கங்கள் 254
பன்னாட்டுத்
தரப்புத்தக
எண்
9781667156811
முன்னைய
நூல்
துருவத்தின் கல்லறைக்கு
அடுத்த
நூல்
மொழியா வலிகள் பகுதி-1

காதலே மூச்சு என்கின்ற கற்பனையில் மிதக்கும் ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கு அந்தக் காதலே பொய், அவன் அல்லது அவள் காதலித்தவர் பொய்யின் உருவம் என்பது தெரிகிறபோது அவர்கள் மனதில் தோன்றும் உணர்வுகளுக்கு இந்தப் பிரபஞ்சத்தின் எல்லையைத் தாண்டியும் சொற்களைக் கொண்டுவர முடியாது. காதல் போதை. அதுவே தோல்வி அடையும்போது அவனைத் தற்கொலை செய்யத் துண்டும் காலனின் பாசக்கயிறாகிறது. காதல் வயப்படாதவனுக்கு இவன் ஏன் தற்கொலை செய்தான் என்றிருக்கும். அந்தப் போதையில் அகப்பட்டவனுக்கு இனி வாழ்ந்தென்ன பயன் என்றிருக்கும். பலர் காதல் கைகூடாத போது ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பதற்கு இந்தக் கதாநாயகனோடு பயணிக்கும்போது ஓரளவு புரிதல் உண்டாகும். அதற்காக அதுவே வழியென்று யாரும் எடுத்துக் கொள்ளக் கூடாது. காதலின் காயத்திற்கும் காலம் மருந்து தரும். காதல், ஏமாற்று, துரோகம், கோபம், துக்கம், இயலாமை, அதீத நம்பிக்கை என்கின்ற உணர்ச்சிகளில் கொந்தளித்து, தனது வாழ்வை அழித்துக் கொண்ட ஒருவனை இந்த நாவலில் நீங்கள் பார்க்கலாம்.


"https://wiki1.tamilar.wiki/index.php?title=காமமே_காதலாகி&oldid=29183" இருந்து மீள்விக்கப்பட்டது