கோவி. பெருமாள்
கோவி. பெருமாள் (பிறப்பு: டிசம்பர் 25 1941) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். தமிழானந்தன் எனும் புனையரில் எழுதிவரும் இவர் "சங்கமணி" வார இதழின் துணையாசிரியராவார். மேலும் இவர் ஒரு சிறந்த ஓவியரும் கூட.
எழுத்துத் துறை ஈடுபாடு
1959 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், வானொலி நாடகங்கள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
பரிசில்களும், விருதுகளும்
- "ஓவியர் திலகம்" விருது