மாமல்லபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

5,101 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  23 நவம்பர் 2011
imported>Bseshadri
imported>Bseshadri
வரிசை 102: வரிசை 102:


=== அர்ச்சுனன் தபசு ===
=== அர்ச்சுனன் தபசு ===
சுமார் 30 மீட்டர் உயரம், சுமார் 60 மீட்டர் அகலம் கொண்ட, சிற்பங்கள் செதுக்கப்பட்ட பாறையே [[அருச்சுனன் தபசு]] என்றழைக்கப்படுகிறது. வானவர்கள், மனிதர்கள், மிருகங்கள் எனப் பலவகையான சிற்பங்கள் காணப்படுகின்றன. ஒற்றைக்காலில் நின்று ஒரு மனிதர் தவமிருக்க அருகே கையில் ஓர் ஆயுதத்தை ஏந்தியபடி சிவன் பூதகணங்கள் சூழ நின்று வரம் கொடுப்பதாகச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. அருச்சுனன் பாசுபத ஆஸ்திரத்தை வேண்டி சிவனை நோக்கித் தவம் செய்யும் காட்சிதான் இங்கே செதுக்கப்பட்டுள்ளது என்று பல அறிஞர்கள் சொல்கிறார்கள். ஒருசிலர், பகீரதன் கங்கையை வரவைப்பதற்காகச் சிவனிடம் தவம் செய்யும் காட்சி இது என்று கூறுகிறார்கள். ஓர் அறிஞர், இந்தச் சிற்பமே ஒரு சிலேடை என்றும் இரு காட்சிகளையும் ஒரே சிற்பத்தில் காட்டும் முயற்சி என்றும் சொல்கிறார். சமீபத்தில் ஓர் அறிஞர், இங்கே தவம் செய்வது பாசுபத அஸ்திரம் வேண்டி நிற்கும் அருச்சுனன்தான் என்றும் ஆனால் இந்தச் சிற்பம், மகாபாரதத்தில் வனபர்வத்தின் இமய மலையைச் சித்திரிக்கும் காட்சி என்றும் குறிப்பிட்டுள்ளார்.<ref name="kalachuvadu_book">{{cite book|title=அருச்சுனன் தபசு|authors=சா. பாலுசாமி}}</ref>
சுமார் 30 மீட்டர் உயரம், சுமார் 60 மீட்டர் அகலம் கொண்ட, சிற்பங்கள் செதுக்கப்பட்ட பாறையே [[அருச்சுனன் தபசு]] என்றழைக்கப்படுகிறது. வானவர்கள், மனிதர்கள், மிருகங்கள் எனப் பலவகையான சிற்பங்கள் காணப்படுகின்றன. ஒற்றைக்காலில் நின்று ஒரு மனிதர் தவமிருக்க அருகே கையில் ஓர் ஆயுதத்தை ஏந்தியபடி சிவன், பூதகணங்கள் சூழ நின்று, வரம் கொடுப்பதாகச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. அருச்சுனன் பாசுபத ஆஸ்திரத்தை வேண்டி சிவனை நோக்கித் தவம் செய்யும் காட்சிதான் இங்கே செதுக்கப்பட்டுள்ளது என்று பல அறிஞர்கள் சொல்கிறார்கள். ஒருசிலர், பகீரதன் கங்கையை வரவைப்பதற்காகச் சிவனிடம் தவம் செய்யும் காட்சி இது என்று கூறுகிறார்கள். ஓர் அறிஞர், இந்தச் சிற்பமே ஒரு சிலேடை என்றும் இரு காட்சிகளையும் ஒரே சிற்பத்தில் காட்டும் முயற்சி என்றும் சொல்கிறார். சமீபத்தில் ஓர் அறிஞர், இங்கே தவம் செய்வது பாசுபத அஸ்திரம் வேண்டி நிற்கும் அருச்சுனன்தான் என்றும் ஆனால் இந்தச் சிற்பம், மகாபாரதத்தில் வனபர்வத்தின் இமய மலையைச் சித்திரிக்கும் காட்சி என்றும் குறிப்பிட்டுள்ளார்.<ref name="kalachuvadu_book">{{cite book|title=அருச்சுனன் தபசு|authors=சா. பாலுசாமி}}</ref>
 
மாமல்லபுரத்தின் அதிசயம் என்றே இந்தச் சிற்பத் தொகுதியைக் குறிப்பிடவேண்டும். இந்த ஒரு திறந்தவெளிப் பாறையில் சிற்பிகள் 150-க்கும் மேற்பட்ட சிற்பங்களைச் செதுக்கியுள்ளனர். இவற்றைப் பொதுவாகக் கீழ்க்கண்ட வகைகளாகப் பிரிக்கலாம்:
* அருச்சுனன் சிவனிடம் பாசுபத அஸ்திரம் வேண்டிச் செய்யும் தவம்: இதில் உடல் ஒட்டி, எலும்பும் நரம்பும் வெளியே தெரியக்கூடிய தவக்கோலத்தில் ஒற்றைக் காலில் நின்று இரு கைகளையும் பூட்டி சூரிய வணக்கம் செய்யும் அருச்சுனன், கையில் பாசுபத ஆயுதத்தை வைத்து நிற்கும் சிவன், சுற்றி பூதகணங்கள்.
* இரு பாறைப் பிளவுகளுக்கு இடையே கங்கை ஆறு ஓடிவருமாறு அழகாகச் செய்யப்பட்டிருக்கும் பாதை. அதில் காணப்படும் நாகர்கள். மழை பொழியும்போது இந்தப் பாதை வழியாக ஆறுபோலவே ஓடும் காட்சியைக் காணலாம்.
* கங்கை ஆற்றின் இருபுறமும் ஆற்றை நோக்கி வரும் சூரியன், சந்திரன், தேவர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், கின்னரர்கள் (கீழுடல் பறவை, மேலுடல் மனிதர்).
* வதரியாசிரமம் (பத்ரிநாத்) எனப்படும் ஒரு திருமால் கோயில், அதன்முன் அமர்ந்திருக்கும் சில முனிவர்கள் (இவர்களின் தலை துண்டாகியுள்ளது), கங்கை ஆற்றில் குளித்து சடங்குகள் செய்யும் பக்தர்கள்.
* வேடர்கள். இவர்கள் வேட்டையாடிய பொருள்களைக் கையில் எடுத்து வருமாறு அமைக்கப்பட்டுள்ளனர்.
* பல்வேறுவிதமான விலங்குகள், பறவைகள்: மாபெரும் யானைகள், இருவிதமான குரங்குகள், சிங்கம், புலி, மான், அன்னப் பறவை, உடும்பு போன்றவை.
* பொய்த்தவப் பூனை. தின்று கொழுத்த ஒரு பூனை தவம் செய்துகொண்டிருக்க, அருகே பல எலிகள், பூனை திருந்திவிட்டது என்று எண்ணித் தாமும் அதனுடன் சேர்ந்து கரம் கூப்பித் தொழும் காட்சி. இந்தக் கதை மகாபாரதத்தின் வனபர்வத்தில் துரியோதனன் சொல்வதாக வருகிறது.<ref name="kalachuvadu_book">{{cite book|title=அருச்சுனன் தபசு|authors=சா. பாலுசாமி}}</ref> பின்னர் பல்வேறு இந்தியப் பாரம்பரியக் கதைகளிலும் இந்தக் கதை வருகிறது.
 
குரங்குகள் அமர்ந்திருக்கும் விதம், மான் தன் காலைத் தூக்கி முகவாயைச் சொரிந்துகொள்ளும் விதம், யானைகள் நீர் அருந்துவது, குட்டி யானைகள் விளையாடுவது போன்ற காட்சிகள் மிக அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு இணையாக இயற்கைக் காட்சிகளைச் சித்திரிக்கும் பாறைச் சிற்பங்களைக் காண்பது அரிது.


=== மகிஷாசுரமர்த்தினி சிற்பம் ===
=== மகிஷாசுரமர்த்தினி சிற்பம் ===
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/104418" இருந்து மீள்விக்கப்பட்டது