தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary |
|||
வரிசை 19: | வரிசை 19: | ||
|பின்குறிப்புகள் = | |பின்குறிப்புகள் = | ||
}} | }} | ||
"மயிலாடுதுறை" எனும் இந்த ஊர் வடமொழியில் மயூரம் என்றும், கௌரி மாயூரம் என்றும் அழைக்கப்பட்டு பிற்காலத்தில் மாயவரம் அல்லது மாயாரம் என்று வழங்கப்பட்டுள்ளது. இவ்வூர் இந்திய நாட்டில் தமிழ்நாடு மாநிலத்தில் நாகபட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது | |||
==பெயர்காரணம்== | |||
சிவனிடம் பெற்ற சாபம் காரணமாக இந்த ஊரில் ஓடும் காவிரி நதியின் தென்புறத்தில் உமையவள் மயிலுருவில் தவமியற்றுகிறாள். தவத்தை மெச்சிய சிவன் ஆண் மயிலுருகொண்டு பெண்மயிலான பார்வதியுடன் ஆடிய காரணத்தால் மயிலாடிய காவிரித்துறை என்று இத்தலம் பெயர் பெற்றுள்ளது. அரசாங்க ஏடுகளில் சில பல ஆண்டுகளுக்கு முன் வரை மாயவரம் என்றே இருந்த இவ்வூர், திருமுறைகளில் “மயிலாடுதுறை” என காணப்படுவதை சுட்டிக்காட்டி “மயிலாடுதுறை” என்று தமிழக அரசால் பெயர்மாற்றம் செய்யபட்டது. | |||
==நகரின் அமைவிடம்== | |||
தமிழக டெல்டாவின் முக்கிய நகரங்களான திருவாரூர், கும்பகோணம், சிதம்பரம், நாகை ஆகிய நகரங்களின் பிரதான சந்திப்பாக இந்த ஊர் விளங்குகிறது. இந்த ஊரிலிருந்து மேற்குறிப்பிட்ட நகரங்கள் அனைத்தும் தலா ஒன்றரை மணி பயணத்தொலைவில் அமைந்துள்ளன. நாகபட்டினம் மாவட்டத்தில் உள்ள மூன்று நகராட்சிகளில் மயிலாடுதுறையும் ஒரு நகராட்சி ஆகும். பூம்புகார், குத்தாலம், சீர்காழி, மயிலாடுதுறை உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய நாடுளுமன்ற தொகுதியாக மயிலாடுதுறை விளங்குவதோடு தமிழகத்தின் பெரிய நகரங்களுடன் ஒப்பிடும் பொழுது அளவில் சிறிய நகரமாய் இருந்தாலும் உலக அளவில் அறியபட்டுள்ள நகரமாக இது விளங்கி வருவது குறிப்பிட தக்கது. | |||
==தொழில் நிலவரம்== | |||
குறிப்பிட்டு சொல்லும்படியான தொழிலகங்கள் இவ்வூரில் இல்லையென்றாலும் மக்களின் முதன்மை தொழிலாக விவசாயமே இருந்துவருகிறது. நகரின் முக்கிய சுற்றுபுற ஊர்களான குத்தாலம், மங்கைநல்லூர், வைதீஸ்வரன்கோயில், செம்பனார்கோயில் உள்ளிட்ட சிறுநகர மக்களும் அவைகளை சுற்றியுள்ள கிராமப்புற மக்களும் வேளான்மையையே முதல் தொழிலாக மேற்கொள்ளுகின்றனர். காவிரியில் நீர்வரத்து இல்லாத போதும் நிலத்தடிநீர் பாசனம் கைகொடுப்பதால் டெல்ட்டா வட்டாரத்தில் உள்ள ஊர்களில் இன்றும் முப்போகம் விளையும் பகுதியாக இது திகழ்கிறது. அதேபோல நகர்புறத்தில் வசிக்கும் மக்களில் பலர் அரசு பணியாளர்களாக இருப்பதோடு மற்றவர்கள் தனியார் நிறுவனங்களிலும் பணி புரிகின்றனர். இவர்கள் தினம் அருகில் உள்ள நகரங்களுக்கு வேலை நிமித்தமாக பேருந்து அல்லது இரயில் மார்க்கமாக சென்று வருவதும் குறிப்பிடத்தக்கது. | |||
==கல்வி நிறுவனங்கள்== | |||
மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதி மக்களின் கல்வியறிவு வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய பெருமை நகரிலிருந்து குறிப்பிடும் தொலைவில் அமைந்த ஞானாம்பிகை கல்லூரி, தருமபுரம் ஆதினக்கலை கல்லூரி, ஏ.வீ.சீ கல்லூரிகள் ஆகியவையையே சாரும். இந்த மூன்று கல்வி நிருவணங்களும் பாரம்பரிய பெருமை கொண்டதோடு மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதில் இருந்தும் இன்றைய நாட்களில் மாணவர்கள் வந்து பயிலும் வண்ணம் சிறப்பு எய்தியுள்ளன. பள்ளிகளை பொறுத்த வரை தேசியமேல்நிலை பள்ளி, நகராட்சி மேல்நிலை பள்ளி, புனித பால்கு மேல்நிலை பள்ளி உள்ளிட்ட அனைத்து பள்ளிகளும் பாரம்பரிய சிறப்பு உள்ளவைகளாகவும், ஒழுக்கத்தை அடிப்படையாக கொண்ட கல்வி போதிப்பதிலும் சிறப்புற்று விளங்குகின்றன. | |||
==நிருவாகவியல்== | |||
மயிலாடுதுறை நகராட்சியாக விளங்குவதோடு மட்டுமல்லாமல் சுற்றுவட்டார ஊராட்சிகளின் ஒன்றியமாகவும் திகழ்கிறது. மேலும் குற்றவியல் நீதிமன்றங்கள், அமர்வு நீதி மன்றங்கள், அரசு பெரியார் மருத்துவமனை, அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட அத்தியாவசிய அரசு நிறுவனங்கள் இங்கு இயங்கி வருகின்றன. | |||
==முக்கிய வீதிகள்== | |||
நகரத்தின் முக்கிய வீதிகளாக பட்டமங்கலம், கச்சேரி சாலை, மகாதானதெரு, கன்னாரதெரு, துலாகட்டம், தருமபுரம் சாலை, தரங்கை சாலை, பெரிய கடைதெரு, சின்னகடைதெரு, காந்திஜி சாலை, கூறைநாடு, மயூரநாதர் பிரகார வீதிகள், கால்டாக்சி உள்ளிட்ட தெருக்கள் அமைந்துள்ளன. | |||
==முக்கியதிருவிழா== | |||
நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி பேராலய திருவிழாவிற்கு பின் உள்ளூர் விடுமுறை இந்த ஊரில் நடைபெறும் “கடை முழுக்கு” திருவிழாவிற்கு விடப்டுகிறது. ஐப்பசி மாதம் முழுவதும் மயூரநாதசுவாமி ஆலயத்தில் நடைபெறும் திருவிழாக்களின் பிரதான நிகழ்வான “கடைமுக தீர்த்தவாரி” முழுக்கு என்ற பெயரில் வழங்கபடுகிறது. துலா மாதம் முழுவதும் காவிரியில் அனைத்து தீர்த்தங்களும் சங்கமிப்பதாக கருதப்படுவதால் முப்பது நாளும் தீர்த்த வாரி நடைபெறும். மாதத்தின் கடைசி பத்து நாட்களில் மட்டும் மயூரநாத சுவாமி சன்னதியில் மட்டுமல்லாது நகரின் அனைத்து சிவாலயங்களில் இருந்தும் சுவாமிகள் துலாகட்டம் என்னும் காவிரி படித்துறைக்கு எழுப்பபட்டு தீர்த்தவாரி செய்யப்படும். இதில் ஐப்பசி மாதத்தின் முப்பதாம் நாளான இறுதிநாளன்று மக்கள் அதிகமாக நீராடுவதால் இது “கடை முழுக்கு” எனும் பெயரில் கோலாகலமாக இந்நகரில் கொண்டாட படுகிறது. இந்நாட்களில் புதியபேருந்து நிலையம் அருகில் அமைக்கப்படும் வீட்டு உபயோக பொருட்காட்சி “முழுக்குகடை” என்ற பெயரில் இரண்டுமாத காலம் நீடிக்கிறது | |||
==சிறப்புகள்== | |||
“ஆயிரம் ஆனாலும் மாயுரம் ஆகாது” என்ற சிறப்பு சொலவடையை பெற்றுள்ள இந்நகரம் உலகபுகழ்பெற்ற மூட்டுவலி தைலமான “ மாயவரம் ஆர். எஸ். கிருஷ்ணா&கோ தென்னமரக்குடி எண்ணெய்க்கு” பிறப்பிடமாக விளங்குகிறது. அதோடு மட்டுமல்லாது மாயவரம் பில்டர் காப்பி, கைமுறுக்கு, காளியாகுடி ஹோட்டல் போன்றவை இன்றளவும் உலக தமிழர்கள் சிலாகிக்கும் ஒன்றாகும் | |||
==முக்கிய ஆண்மீகதளங்கள்== | |||
நகரில் மயூரநாதர், ஐயாறப்பர், காசிவிஸ்வநாதர், மேதாதட்சிணாமூர்த்தி மூர்த்தி ஆலயம் போன்ற சிவாலயங்களோடு கீழ்காணும் ஆலயங்கள் நகரை சுற்றி அமைந்துள்ளன. | |||
*திருஇந்தளூர்- பரிமள அரங்கர் ஆலயம் | |||
*நீடூர் - திருநீடூர் அருட்சோமநாதர் கோயில் | |||
*விளநகர் - திருவிளநகர் உசிரவனேசுவரர் கோயில் | |||
*பரசலூர் - கீழ்ப்பரசலூர் வீரட்டேசுவரர் கோயில் | |||
*திருச்சம்பள்ளி - திருச்செம்பொன்பள்ளி | |||
*பொன்செய் - புஞ்சை நற்றுணையப்பர் கோயில் | |||
*தலைச்சங்காடு சங்காரண்யேசுவரர் கோயில் | |||
*சாயாவனம் - திருச்சாய்க்காடு | |||
*மேலப்பெரும்பள்ளம் வலம்புரநாதர் கோயில் | |||
*வைத்தீஸ்வரன்கோவில் - புள்ளிருக்கு வேளூர் | |||
*திருப்புன்கூர் சிவலோகநாதர் கோயில் | |||
*தலைஞாயிறு - திருக்கருப்பறியலூர் | |||
*திருமணஞ்சேரி | |||
*தேரழுந்தூர் வேதபுரீஸ்வரர் கோயில் | |||
*திருவாடுதுறை மாசிலாமணீசுவரர் கோயில் | |||
==பிரபலங்கள்== | |||
*தமிழின் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரம் எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை நகர முன்சீப்பாக இந்த ஊரில் தான் பணிபுரிந்தார். | |||
*தமிழ் திரையுலகின் புகழ் பெற்ற எம். கே. தியாகராஜ பாகவதர் | |||
*சதுரங்க விளையாட்டு வீரர் விசுவநாதன் ஆனந்த் | |||
*திரை இயக்குநர் விஜய டி. ராஜேந்தர் | |||
*திரை இயக்குநர் கே. எஸ். கோபாலகிருஷ்ணன் | |||
*திரை இயக்குநர் மல்லியம் ராஜகோபால் | |||
*அன்பாலயா பிரபாகரன் | |||
*மக்கள் சக்தி இயக்கம் நிறுவனர் எம். எஸ். உதயமூர்த்தி | |||
*திரை ஒளிப்பதிவாளர் ஆர். டி. ராஜசேகர் | |||
== இவற்றையும் பார்க்கவும் == | == இவற்றையும் பார்க்கவும் == |