சுசித்ரா

ஆர்ஜே சுச்சி (RJ Suchi - Radio Jockey Suchi) என பரவலாக அறியப்படும் சுசித்ரா (Suchitra) தமிழகத்தைச் சேர்ந்த வானொலி ஒலிபரப்பாளர் ஆவார். தமிழ், மலையாளம், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் மொத்தமாக நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

சுசித்ரா
பிறப்புசசித்ரா ராமதுரை
ஆகத்து 14, 1982 (1982-08-14) (அகவை 42)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிபாடகி, வானொலி ஒலிபரப்பாளர்,
செயற்பாட்டுக்
காலம்
2002–நடப்பு
உயரம்5'5
வாழ்க்கைத்
துணை
கார்த்திக் குமார்
வலைத்தளம்
Official site

ஆரம்பத்தில் ரேடியோ மிர்ச்சி (சென்னை) பண்பலை வானொலி நிலையத்தில் பணியாற்றிய இவர், தற்போது ரேடியோ ஒன் (சென்னை) பண்பலை வானொலி நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.

சர்ச்சை

இவர் தன் கீச்சு கணக்கு கொந்தர்களால் கைப்பற்றப்பட்டு உள்ளதாக கூறினார், இவரின் கீச்சு கணக்கிலிருந்து தன்னை நடிகர் தனுசின் பாதுகாவலர்கள் தொந்தரவு செய்ததாக தெரிவித்தார். தனுசு தனக்கு போதை கொடுத்து தன்னை வன்புணர்ந்ததாக கூறினார்.[1] நடிகர்கள் தனுசு, அனுயா, அன்சிகா, அனிருத், சஞ்சிதா செட்டி, மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் நெருக்கமாக இருக்கும் படங்களையும் அட்டவணை போட்டு வெளியிட்டு வருகிறார்.[2][3] பாடகி சுசித்ரா மன அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது கணவர் கார்த்திக் தெரிவித்திருந்தார்[4]. பாடகி சின்மயி தனுசுடனும் அன்ரித்துடனும் இருப்பது போன்ற நிழற்ப்படங்களை வெளியிட்டிருந்தார். விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்தும் டிடி என்பவர் வேறு ஆணுடன் இருப்பது போன்ற நிழற்படங்களை வெளியிட்டிருந்தார்[5]

உசாத்துணை

வெளியிணைப்புகள்

மேற்கோள்கள்

"https://wiki1.tamilar.wiki/index.php?title=சுசித்ரா&oldid=22792" இருந்து மீள்விக்கப்பட்டது