திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம்

திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் நாற்பத்தி எட்டு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருவரங்குளத்தில் இயங்குகிறது.

திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,48,695 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 22,463 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 16 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்

திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 48 ஊராட்சி மன்றங்களின் விவரம்: [3]

திருவரங்குளம் ஊராட்சி ஒன்றித்தில் உள்ள 48 ஊராட்சி மன்றங்கள்:
  1. அரையப்பட்டி
  2. ஆலங்காடு
  3. இசுகுபட்டி
  4. எல். என். புரம்
  5. கத்தகுறிச்சி
  6. கரும்பிரான்கோட்டை
  7. கலங்குடி
  8. கல்லாலங்குடி
  9. காயாம் பட்டி
  10. கீழாத்தூர்
  11. குப்பகுடி
  12. குலமங்கலம் தெற்கு
  13. குலமங்கலம் வடக்கு
  14. குளவாய்பட்டி, எஸ்.
  15. கே. வி. கோட்டை
  16. கைக்குறிச்சி
  17. கொத்தகோட்டை
  18. கொத்தமங்கலம்
  19. கோவிலூர்
  20. செரியலூர் இனாம்
  21. செரியலூர் ஜமீன்
  22. சேந்தன்குடி
  23. சேந்தாகுடி
  24. திருக்கட்டளை
  25. திருவரங்குளம்
  26. தெட்சிணாபுரம்
  27. நகரம்
  28. நெடுவாசல் கிழக்கு
  29. நெடுவாசல் மேற்கு
  30. பள்ளதிவிடுதி
  31. பனங்குளம்
  32. பாச்சிக்கோட்டை
  33. பாத்தம்பட்டி
  34. பாலையூர்
  35. புதுக்கோட்டைவிடுதி
  36. புள்ளான்விடுதி
  37. பூவரசகுடி
  38. மணியம்பலம்
  39. மாங்காடு
  40. மாஞ்சான்விடுதி
  41. மேலாத்தூர்
  42. ராசியமங்கலம், கே.
  43. வடகாடு
  44. வல்லாதிரகோட்டை
  45. வாண்டாக்கோட்டை
  46. வென்னாவல்குடி
  47. வேங்கிடகுளம்
  48. வேப்பங்குடி

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்