திருவிதாங்கோடு

திருவிதாங்கோடு (ஆங்கிலம்:Thiruvithankodu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

திருவிதாங்கோடு
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
வட்டம் கல்குளம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

18,723 (2011)

3,601/km2 (9,327/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 5.2 சதுர கிலோமீட்டர்கள் (2.0 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/thiruvithancode

இவ்வூரில் இரண்டு முத்தாரம்மன் ஆலயங்களும், ஒரு சிவன் கோவிலும், மூன்று வினாயகர் கோவில்களும் காணப்படுகின்றன. ஏசுநாதர் தேவாலயமும், நான்கு மசூதிகளும் உள்ளன. இங்குள்ள [[படிக்கிணறு பிரசித்தி பெற்றது.

அமைவிடம்

நாகர்கோவிலிலிருந்து - கேரளா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 14 கி.மீ. தூரத்திலுள்ள தக்கலையிலிருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தூரத்தில் திருவிதாங்கோடு அமைந்துள்ளது. திருவிதாங்கோட்டிற்குக் கிழக்கே நாகர்கோவில் 21 கி.மீ.; மேற்கே மார்த்தாண்டம் 15 கி.மீ.; வடக்கே குலசேகரம் 15 கி.மீ.; தெற்கே திங்கள்சந்தை 4 கி.மீ. தொலைவில் உள்ளன. அருகமைந்த தொடருந்து நிலையம் இரணியல் 4 கி.மீ. தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

5.2 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 82 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி பத்மநாபபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4469 வீடுகளும், 18723 மக்கள்தொகையும் கொண்டது. [4]

வரலாறு

முன்னர் திருவாங்கூர்-கொச்சி சமஸ்தானத்தின் தலைநகராக திருவிதாங்கோடு இருந்தது எனவும், திரு-விதான்-கோடு என்பது மருவியே திருவாங்கூர் ஆனது என்றும் திருவாங்கூர் மேனுவலில் கூறப்பட்டுள்ளது.

கல்வி & தொழில்

ஓர் அரசு நடுநிலைப் பள்ளியும், ஓர் அரசு உயர்நிலைப் பள்ளியும் உள்ளன. இங்கு ஒரு முன்மாதிரித் தொழிற்சாலை உள்ளது.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "திருவிதாங்கோடு பேரூராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-03-25. பார்க்கப்பட்ட நாள் 2019-03-24.
  4. "பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்". Archived from the original on 2020-05-29. பார்க்கப்பட்ட நாள் 2019-03-24.
"https://tamilar.wiki/index.php?title=திருவிதாங்கோடு&oldid=115338" இருந்து மீள்விக்கப்பட்டது