நந்திக் கோயில், கஜுராஹோ
நந்திக் கோயில், கஜுராஹோ (Nandi Temple, Khajuraho India) இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்திலுள்ள சிறிய ஊரான கஜுராஹோவில் [2] என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும். இது இந்து இதிகாசத்தில் சிவனின் வாகனமாக நந்திக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஒரு பொதுவான கட்டிடக்கலைப் போக்காக, சிவன் (மற்றும் பார்வதி) கோயில்கள் சிவனை நோக்கி அமர்ந்திருக்கும் நந்தியின் கல் உருவங்களைக் காட்டுகின்றன. இதனைப் பின்பற்றி, இந்த கோயில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட விஸ்வநாதர் கோயிலுக்கு எதிரே அமைந்துள்ளது.[1]
நந்திக் கோயில் | |
---|---|
நந்திக் கோயில், கஜுராஹோ | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | மத்தியப் பிரதேசம் |
மாவட்டம்: | சத்தர்பூர், கஜுராஹோ[1] |
அமைவு: | கஜுராஹோ[1] |
ஆள்கூறுகள்: | 24°51′11.9″N 79°55′21.7″E / 24.853306°N 79.922694°E |
கோயில் தகவல்கள் | |
வரலாறு | |
அமைத்தவர்: | சந்தேல அரசர்கள் |
இந்த அமைப்பு இந்தியாவில் உள்ள உலக பாரம்பரிய தளமான கஜுராஹோ நினைவுச்சின்னங்களின் தொகுதிகளில் ஒன்றாகும்.
அமைவிடம்
கஜூராஹோவின் கிழக்கு கோவில்களின் வளாகத்தின் உட்பகுதியில் விஸ்வநாதர் கோவிலுக்கு எதிர்புறம் இக்கோவில் அமைந்துள்ளது.[1]
கட்டிடக்கலை
கட்டிடமானது எளிய நீள்சதுர வடிவில் (மேடை அமைப்பில் ) உள்ளது. முக்கிய பகுதியானது சதுர குறுக்கு பிணைப்பு வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. நீள் சதுர வடிவ அமைப்பு சன்னிதியையும், குறுக்கு நுனிகள் நான்கு துருத்து மாடத்தையும் உருவாக்குகிறது..[3] கோவில் சுவர்கள் மாடம் போன்றே காட்சியளிக்கின்றன. இதன் சுவர்கள் சன்னதியை முழுமையாக மறைக்கும் வகையில் இல்லை. மேற்கூரை நுனியில் தூண்கள் அமைந்துள்ளன. விளிம்பு வடிவமைப்பில் யானை ( தலை, தும்பிக்கை மற்றும் இரண்டு கால்கள்). மற்றும் பக்கவாட்டில் மனித உருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. பாலுணர்வைத்தூண்டும் சிற்பங்கள் மேற்கூரையின் வெளிப்புறத்தில் செதுக்கப்பட்டுள்ளன.[3]
சிவ பெருமானார் சிலை (கழுத்தில் பாம்புடன் வலது தோளில் சூலத்தை சாய்த்து வைத்தவாறு செதுக்கப்பட்டுள்ளது ) வெளிப்புற கூரையில் சுவர் விளிம்பு வேலைப்பாடுகளுடன் இதைக் காண முடிகிறது
நந்தி சிற்பம்
நந்தி சிற்பம் (படம் பார்க்க) 2.2 மீட்டர் நீளமும் , 1.8 மீ உயரமும் கொண்டது.[1] [4]
தொகுப்பு
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளித்தரவுகள்
- M.P. Tourism Website, Official Website of Madhya Pradesh State Tourism Corporation, Khajuraho
- Archaeological Survey of India, Bhopal Division, Index Page for Khajuraho - Chhatarpur
- Archaeological Survey of India, Bhopal Division, Nandi Temple, Khajuraho