நம்பியூர்

நம்பியூர் (Nambiyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் உள்ள நம்பியூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். நம்பியூர் நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

நம்பியூர்
—  பேரூராட்சி  —
நம்பியூர்
இருப்பிடம்: நம்பியூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°22′N 77°20′E / 11.37°N 77.33°E / 11.37; 77.33Coordinates: 11°22′N 77°20′E / 11.37°N 77.33°E / 11.37; 77.33
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
வட்டம் நம்பியூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

16,379 (2011)

677/km2 (1,753/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

24.20 சதுர கிலோமீட்டர்கள் (9.34 sq mi)

301 மீட்டர்கள் (988 அடி)

இணையதளம் www.townpanchayat.in/nambiyur

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் Coordinates: Missing latitude
Invalid arguments have been passed to the {{#coordinates:}} function ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 301 மீட்டர் (987 அடி) உயரத்தில் இருக்கின்றது. இது 27 குக்கிராமங்கள் கொண்டது

அமைவிடம்

நம்பியூர் பேரூராட்சிக்கு கிழக்கில் 55 கிமீ தொலைவில் ஈரோடு உள்ளது. இதன் மேற்கில் புளியம்பட்டி 22 கிமீ; வடக்கில் சத்தியமங்கலம் 26 கிமீ; தெற்கில் அவிநாசி 24 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

24.20 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 80 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி கோபிச்செட்டிப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [5]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,913 வீடுகளும், 16,379 மக்கள்தொகையும் கொண்டது. [6]

பள்ளிகள்

நம்பியூரில் கீழ்கண்ட பள்ளிகள் இயங்கி வருகின்றன.

  1. அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி,நம்பியூர்
  2. அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி-கெடாரை
  3. அரசு ஆரம்பப் பள்ளி - காந்திபுரம்,நம்பியூர்
  4. அரசு ஆரம்பப் பள்ளி,நம்பியூர்
  5. குமுதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,நம்பியூர்
  6. காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,நம்பியூர்
  7. ஆலயம் மெட்ரிக் பள்ளி,நம்பியூர்
  8. அரசு மாதிரி மேல்நிலை பள்ளி,பட்டிமணியகாரன்பாளையம்.

கோவில்கள்

நம்பியூரில் கீழ்கண்ட கோவில்கள் உள்ளன

  1. அருள்மிகு தான்தோன்றி ஈஷ்வரர் திருக்கோவில்.
  2. திருவிக்ரம நாராயணப் பெருமாள் கோவில்.
  3. அருள்மிகு ஆண்டவ குல ஸ்ரீ அய்யன் திருக்கோவில், சூரிபாளையம்
  4. அருள்மிகு திட்டமலை ஸ்ரீ குழந்தை குமாரசுவாமி திருக்கோவில், திட்டமலை
  5. மஸ்ஜித் அல் ஹிதாயா சுன்னத் ஜாமாத் பள்ளி வாசல், நம்பியூர்

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "Nambiyur". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.
  5. நம்பியூர் பேரூராட்சியின் இணையதளம்
  6. Nambiyur Population, Religion, Caste Census 2011


"https://tamilar.wiki/index.php?title=நம்பியூர்&oldid=123993" இருந்து மீள்விக்கப்பட்டது