நல்லாசிரியர் இலக்கணம்

நல்லாசிரியர் இலக்கணம் என்பது ஒரு நூல் இயற்றும் ஆசிரியனுக்கு இருக்கவேண்டிய நற்குணங்கள் எவையென்று நன்னூல் வரையறை செய்துள்ள பட்டியலாகும்.

குடிப்பிறப்பு, அருளுடைமை, கடவுள் பத்தி ஆகிய மேன்மைகளும் பல கலைகளையும் கற்றுத் தேர்ந்த அறிவும், தாம் கற்றவற்றை பிறருக்கு எடுத்துக் கூறும் சொல் வன்மையும், பூமி, மலை, துலாக்கோல், மலர் ஆகியனவற்றின் தன்மைகளும், உலகியலறிவும், உயர்ந்த குணங்களும் உடையவனே நூல் உரைக்கும் ஆசிரியன் ஆவான்.[1]

அடிக்குறிப்புகள்

  1. குலன்அருள் தெய்வம் கொள்கை மேன்மை
    கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை
    நிலம்மலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும்
    உலகியல் அறிவோடு உயர்குண மினையவும்
    அமைபவன் நூலுரை ஆசிரி யன்னே. - நன்னூல் 26

வெளி இணைப்புகள்