பனையபுரம் அதியமான்
பனையபுரம் இரா. ப. அதியமான், தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பனையபுரம் கிராமத்தைச் சேர்ந்த புலவர் இராம. பழனிச்சாமி - ருக்மணி அம்மாள் தம்பதியருக்கு அக்டோபர் 4, 1958ஆம் நாளில் பிறந்தார். சென்னை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் பொது மேலாளாராக பணியாற்றிய அதியமான் 2016-ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். இவர் எழுத்தாளர், பத்திரிக்கையாளர், சமூகம் மற்றும் பகுதி நேர வானொலி செய்தி வாசிப்பாளர் எனப்பன்முகத் தன்மை கொண்டவர்.
இயற்பெயர்/ அறியும் பெயர் |
பனையபுரம் அதியமான் |
---|---|
பிறப்புபெயர் | இரா. ப. அதியமான் |
பிறந்ததிகதி | அக்டோபர் 4, 1958 |
பிறந்தஇடம் | புதுச்சேரி,![]() |
பணி | பொது மேலாளர் (பணி நிறைவு) |
தேசியம் | இந்தியர் |
கல்வி | முதுகலை (வரலாறு) பட்டம் |
பணியகம் | சென்னை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி, சென்னை. |
அறியப்படுவது | எழுத்தாளர் |
பெற்றோர் | புலவர் இராம. பழனிச்சாமி (தந்தை), ருக்குமணி அம்மாள் (தாய்) |
துணைவர் | சுசிலா |
பிள்ளைகள் | முனைவர் ப. அ. பாலகுமாரன் (மகன்) |
இணையதளம் | Website |
படைப்புகள்
நூல்கள்
பனையபுரம் அதியமானின் படைப்புகளில் திருத்தலங்களுக்கான வரலாற்றுச் சான்றுகள், கல்வெட்டுக் குறிப்புகள், கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலைகளின் சிறப்புகளைக் கூறும். இவர் இயற்றிய ஆன்மீக நூல்கள் பின்வருமாறு:
- சேய்த் தொண்டர்கள் (முருகனடியார்கள் வரலாறு - நூல்)[1][2]
- அயல்நாடுகளில் அற்புத ஆலயங்கள்[3]
- ஒப்பற்ற வாழ்வு தரும் உன்னத ஆலயங்கள்[4]
- தெய்வமணம் கமழும் திருத்தலங்கள்
- திருப்பம் தரும் திருக்கோயில்கள்
- அறிய வேண்டிய அபூர்வ கோயில்கள்
- திருவான்மியூர் அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் தலவரலாறு
நூல்கள்
பனையபுரம் அதியமானின் படைப்புகளில் திருத்தலங்களுக்கான வரலாற்றுச் சான்றுகள், கல்வெட்டுக் குறிப்புகள், கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலைகளின் சிறப்புகளைக் கூறும். இவர் இயற்றிய ஆன்மீக நூல்கள் பின்வருமாறு:
- சேய்த் தொண்டர்கள் (முருகனடியார்கள் வரலாறு - நூல்)[5][6]
- அயல்நாடுகளில் அற்புத ஆலயங்கள்[7]
- ஒப்பற்ற வாழ்வு தரும் உன்னத ஆலயங்கள்[8]
- தெய்வமணம் கமழும் திருத்தலங்கள்
- திருப்பம் தரும் திருக்கோயில்கள்
- அறிய வேண்டிய அபூர்வ கோயில்கள்
- திருவான்மியூர் அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் தலவரலாறு
பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோயில்
2013-ஆம் ஆண்டில் பனையபுரம் வழியாக விக்கிரவாண்டி-தஞ்சாவூரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 45 சி-ஐ விரிவாக்கம் செய்த போது, பனங்காட்டீஸ்வரர் கோயிலை அகற்றிட அரசு முனைந்தது. பனையபுரம் அதியமான் சிவ பக்தர்கள், பத்திரிக்கையாளர்கள், தொல்லியல் அறிஞர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஊர்மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து அறவழியில் போராடி பனங்காட்டீஸ்வரர் கோயிலை நெடுஞ்சாலைத் துறையால் இடிக்கப்படாமல் பாதுகாததார்.[9]
மேற்கோள்கள்
- ↑ சேய்த் தொண்டர்கள் (முருகன் அடியார்கள் வரலாறு)
- ↑ சேய்த் தொண்டர்கள் (நூல்)
- ↑ அயல்நாடுகளில் அற்புத ஆலயங்கள்
- ↑ ஒப்பற்ற வாழ்வு தரும் உன்னத ஆலயங்கள்
- ↑ சேய்த் தொண்டர்கள் (முருகன் அடியார்கள் வரலாறு)
- ↑ சேய்த் தொண்டர்கள் (நூல்)
- ↑ அயல்நாடுகளில் அற்புத ஆலயங்கள்
- ↑ ஒப்பற்ற வாழ்வு தரும் உன்னத ஆலயங்கள்
- ↑ The Siva temple at Panaiyapuram in Tamil Nadu was to be demolished to make way for widening the Vikkiravandi-Thanjavur highway.