பா. குப்புசாமி
பா. குப்புசாமி (பிறப்பு: டிசம்பர் 28, 1935) மலேசியாவில் மூத்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். பி. கே. சாமி என்ற புனைப்பெயரிலும் எழுதிவரும் இவர், தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்க பொது உறவு அதிகாரியாகப் பணியாற்றி வருகின்றார்.
பா. குப்புசாமி
இயற்பெயர்/ அறியும் பெயர் |
பா. குப்புசாமி |
---|---|
பிறந்ததிகதி | டிசம்பர் 28, 1935 |
அறியப்படுவது | எழுத்தாளர் |
எழுத்துத் துறை ஈடுபாடு
1958-ஆம் ஆண்டு தொடக்கம் சிறுகதைகள், கட்டுரைகள், போன்றவற்றை இவர் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
வானொலித்துறை
மலேசிய வானொலியின் கல்வி ஒலிபரப்பில் இவர் பணியாற்றியுள்ளார். மேலும், பல வானொலி நாடகங்களையும் எழுதியுள்ளார்.
நாடகக் கலைஞர்
இவர் வானொலி மற்றும் தொலைக்காட்சி, மேடை நாடகக் கலைஞராகவும் பணியாற்றி வருகின்றார்.