பி. ஆர். செல்வநாயகம்

பிரின்சிலி ராஜேந்திரன் செல்வநாயகம் (Princely Rajendran Selvanayagam, பிறப்பு: 10, ஆகத்து, 1936) [1] என்பவர் ஒரு இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

Hon.
பி. ஆர். செல்வநாயகம்
மட்டக்களப்பு தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1970–1977
முன்னவர் அப்துல் லத்தீப் சின்னாளபே
பின்வந்தவர் எம். எல். அகமத் ஃபரீத்
தனிநபர் தகவல்
பிறப்பு 10 ஆகத்து 1936 (1936-08-10) (அகவை 88)
இனம் இலங்கைத் தமிழர்

செல்வநாயகம் 1970 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பில் சுயேட்சை வேட்பாளராக நின்றார். இரண்டாவது இடத்தைப் பெற்று மட்டக்களப்புக்கான இரண்டாவது உறுப்பினராக நாடாளுமன்றத்தில் நுழைந்தார். [2] 1977 நாடாளுமன்றத் தேர்தலில் ஐந்தாவது இடத்தைப் பெற்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்படாமல் போனார். [3]

குறிப்புகள்

  1. "Selvanayagam, Princely Rajendran". Parliament of Sri Lanka.
  2. "Result of Parliamentary General Election 1970" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 9 December 2009.
  3. "Result of Parliamentary General Election 1977" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 17 July 2011.
"https://wiki1.tamilar.wiki/index.php?title=பி._ஆர்._செல்வநாயகம்&oldid=24431" இருந்து மீள்விக்கப்பட்டது