புதுக்கோட்டை சீனு
புதுக்கோட்டை சீனு (இறப்பு: சூன் 8, 1951) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரும் எழுத்தாளரும் ஆவார். இவர் நாம் இருவர், மங்கையர்க்கரசி ஆகிய திரைப்படங்களில் நடித்து பின்னர் ஜெமினி ஸ்டூடியோவில் நிரந்தர நடிகராகச் சேர்ந்தார். பின்னர் மிஸ் மாலினி, சக்ரதாரி ஆகிய படங்களில் நடித்தார். கடைசியாக ஔவையார் திரைப்படத்தில் சக்கரம் என்ற கதாபாத்திரத்தில் எல்.நாராயணராவின் சீடராக நடித்திருந்தார்.[1]

ஔவையார் திரைப்படத்தில் கே. பி. சுந்தராம்பாளுடன்
மறைவு
புதுக்கோட்டை சீனு 1951 சூன் 8 ஆம் நாள் தற்கொலை செய்து கொண்டார்[2]
மேற்கோள்கள்
- ↑ "Pudhukottai Seenu". Antru Kanda Mugam. பார்க்கப்பட்ட நாள் 4 நவம்பர் 2016.
- ↑ குண்டூசி, சூலை 1951, பக். 39