மச்ச புராணம்
மச்ச புராணம், அல்லது மத்ஸ்ய புராணம், என்பது பதினெண் புராணங்களில் பதினாறாவது புராணமாகும். இது 14,000 கிரந்தப் பாடல்கள் (சுலோகம்) கொண்டது. இதில், மச்சாவதாரத் தோற்றம், திருமால் நீர்ப்பிரளயத்திலிருந்து வைவஸ்தமனு மற்றும் சப்தரிஷிகளையும் காத்து உலகில் மீண்டும் சீவராசிகளை வளர்ச்சியடையச் செய்ததையும், பிரம சிருட்டி, திரிபுர வதம், தாரகாசுரனுடன் போர், பார்வதி சிவபெருமானை மணத்தல், கந்தனாகிய முருகனின் தோற்றம் ஆகியவற்றை விளக்குகிறது.[1][2][3]

பிரளயத்தின் போது பெருங்கடலிருந்து படகுடன் வைவஸ்தமனு மற்றும் சப்தரிஷிகளையும், மச்ச அவதாரம் கொண்டு திருமால் மீட்கும் காட்சி