மிருகாங்கதன் செல்லத்துரை


மிருகாங்கதன் செல்லத்துரை (பொ.யு. 19-ம் நூற்றாண்டு தொடக்க காலம்) ஈழத்து கூத்துக் கலைஞர். ராம நாடகத்தில் ராவணனாக இவரின் வேடம் முக்கியமானது

மிருகாங்கதன் செல்லத்துரை
இயற்பெயர்/
அறியும் பெயர்
மிருகாங்கதன் செல்லத்துரை
இறப்பு 19-ம் நூற்றாண்டு

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை மட்டக்களப்பில் செல்லத்துரை பிறந்தார். கமலாவதி கூத்தில் மிருகாங்கதனாக நடித்ததால் 'மிருகாங்கதன்' என்ற சிறப்புப் பெயர் முன்னொட்டாகச் சேர்ந்தது. அகன்ற முகம், பெருத்த சரீரம், கலகலப்பான வெண்கலத்தொனி ஆகியவை இவரின் தோற்ற அடையாளங்களாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர். எழுதப்படிக்கத் தெரியாதவர். மனனம் செய்யும் திறன் வாய்க்கப்பெற்றவர்.

கலை வாழ்க்கை

செல்லத்துரை மிருகாங்கத அரக்கன், ராவணன், வீமன், நரகாசுரன் போன்ற பாத்திரங்களை கூத்தில் தாங்கி நடித்த கலைஞர். பேராசிரியர் மெளனகுரு கூத்துப்பாடல்களை தாய்க் கோப்பிலிருந்து இன்னொரு கோப்பிற்கு எழுதிக் கொடுக்க செல்லத்துரை அவற்றை மனனம் செய்வார். ஆட்ட லாவகம், உடல் அசைவுகள் மூலம் கூத்தாட்டத்தை தன் உடல் மொழியால் வெளிக்கொணர்ந்த கலைஞர்.

ஆடிய கூத்துகள்

  • ராம நாடகம்

உசாத்துணை