மு. பக்ருதீன்

மு. பக்ருதீன் (பி: 1939) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'முபன்' எனும் புனைப்பெயரில் அறியப்பட்ட இவர் முன்னாள் ஆசிரியருமாவார்.

மு. பக்ருதீன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
மு. பக்ருதீன்
பிறந்ததிகதி 1939
அறியப்படுவது எழுத்தாளர்

எழுத்துத் துறை ஈடுபாடு

1955 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபாடுகாட்டி வருகின்றார். அதிகமாக சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள், வானொலி/மேடை நாடகங்கள் முதலியவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

இதழியல்

  • "திரை நிலா" மாத இதழின் ஆசிரியராவார்

உலகத்து முன்னோடிகள்

"உலகத்து முன்னோடிகள்" எனும் தலைப்பில் வரலாற்றுத் தலைவர்களை நாடக உருவில் வானொலியில் அறிமுகப்படுத்திள்ளார்.

திரைப்படத்துறை

பிற்காலத்தில் திரைப்படத்தில் ஈடுபாடு கொண்ட இவர் மலேசிய நடிகர்களைக் கொண்டு தமிழ் நாட்டில் "ரத்தப் பேய்" எனும் முழுநீளத் திரைப்படத்தைத் தயாரித்தார். மலேசியத் தமிழர்கள் தயாரித்த முதல் திரைப்படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=மு._பக்ருதீன்&oldid=6386" இருந்து மீள்விக்கப்பட்டது