யாழினி முனுசாமி


கவிஞர் யாழினி முனுசாமியின் இயற்பெயர் ஜெ.முனுசாமி. கீற்றுதிருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுக்காவிலுள்ள மோரணம் என்னும் ஊரில் 02-04-1971 இல் பிறந்தவர். இளங்கலை தமிழிலக்கியத்தை செய்யாறு அறிஞர் அண்ணா அரசுக் கலைக்கல்லூரியிலும் முதுகலை தமிழிலக்கியம் மற்றம் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தை சென்னை மாநிலக்கல்லூரியிலும் படித்தவர். குமுதம் இதழில் ஐந்தாண்டுகள் பணியாற்றியவர். தடாகம் இணையஇதழின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது எஸ்.ஆர்.எம்.கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். முரண்களரி படைப்பகம் என்னும் பதிப்பகத்தையும் நடத்தி வருகிறார். தொழுப்பேடு என்னும் ஆவணப்படத்தையும் இயக்கியுள்ளார்.

யாழினி முனுசாமி
யாழினி முனுசாமி
இயற்பெயர்/
அறியும் பெயர்
யாழினி முனுசாமி
பிறப்புபெயர் ஜெ.முனுசாமி
அறியப்படுவது எழுத்தாளர்

குமுதம், ஆனந்தவிகடன், கல்கி, புத்தகம் பேசுது, உங்கள் நூலகம், கல்வெட்டு பேசுகிறது, புதுப்புனல், கீற்று இணைய இதழ், அந்திமழை இணைய இதழ் உள்ளிட்ட இதழ்களில் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன.

மனைவி, மேரி வசந்தி. இரண்டு பெண் குழந்தைகள் யாழினி, நித்திலா.


கவிதை நூல்கள்

  1. உதிரும் இலை
  2. தேவதையல்ல பெண்கள்
  3. மோகினியுடனான சாத்தானின் உரையாடல்

கட்டுரை நூல்கள்

  1. தலித் இலக்கியமும் அரசியலும்
  2. பின் நவீனத்துவச் சூழலில் புலம்பெயர்ந்தோர் கவிதைகளும் பெண்ணியக்கவிதைகளும்

தொகுப்பு நூல்

  1. குரலற்றவனின் குரல் - தலித் பண்பாட்டு அரசியல் கதைகள்
  2. உதிரும் இலையும் உதிராத பதிவுகளும்
"https://tamilar.wiki/index.php?title=யாழினி_முனுசாமி&oldid=5649" இருந்து மீள்விக்கப்பட்டது