ரேகா கிருஷ்ணப்பா

ரேகா கிருஷ்ணப்பா (Rekha Krishnappa) என்பவர் தென்னிந்திய சின்னத்திரை கதாபாத்திர நடிகை ஆவார்.[1] முதன்முதலில் கன்னட தொலைக்காட்சி தொடரில் நடித்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட சின்னத்திரையில் வலம் வந்து பிரபலமானவர். இவர் தமிழ்நாட்டில் முதன்முதலில் பாரிஜாதம் என்ற தொலைக்காட்சி தொடரில் அறிமுகமானார். பின் சன் தொலைக்காட்சியில் வெளியான தெய்வமகள் தொலைக்காட்சி தொடர் மூலம் தமிழ்நாட்டில் மிகவும் பிரபளமானவர்.[2] தமிழ்நாட்டின் சின்னத்திரையின் சிறந்த வில்லி என்ற விருதையும் பெற்றுள்ளார்.

ரேகா கிருஷ்ணப்பா
தனிநபர் தகவல்
பிறப்பு (1985-09-04)4 செப்டம்பர் 1985
பெங்களூரு, கருநாடகம், இந்தியா
தேசியம் இந்தியர்
இருப்பிடம் சென்னை,
தமிழ்நாடு, இந்தியா
தொழில் சின்னத்திரை நடிகை
சமயம் இந்து

வாழ்க்கை வரலாறு

இவர் செப்டம்பர் 4, 1985 ல் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிறந்தார். இவரின் சொந்த ஊரும் கர்நாடகமே ஆகும். இவருக்கு ஒரு சகோதரனும், மூன்று சகோதரிகளும் , ஒரு மகளும் உள்ளனர். பள்ளிப்படிப்பை முடித்த இவர் பெங்களூரு கல்லூரியில் எம்.பி.ஏ முதுகலை பட்டம் பெற்றவர்.

நடித்த தொலைக்காட்சி தொடர்கள்

மேற்கோள்கள்

  1. Shalini C, ed. (27 மார்ச் 2021). களத்தில் இறங்கிய அண்ணியார் - ரேகா கிருஷ்ணப்பாவின் புதிய சீரியல்!. நியூஸ் 18 தமிழ்.
  2. மீண்டும் வருகிறார் ‛அண்ணியார்' ரேகா கிருஷ்ணப்பா. தினமலர் நாளிதழ். 30 மார்ச் 2021.
"https://wiki1.tamilar.wiki/index.php?title=ரேகா_கிருஷ்ணப்பா&oldid=23624" இருந்து மீள்விக்கப்பட்டது