லியூ சியாபோ

லியூ சியாபோ (Liu Xiaobo, டிசம்பர் 28, 1955 - சூலை 13, 2017)[1][2] என்பவர் ஒரு சீன எழுத்தாளர், அரசியல் விமரிசகர், மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஆவார். 2010ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். இவர் சீனாவில் அரசியல் சீர்திருத்தம் வேண்டியும், கம்யூனிஸ்டுகளின் ஒரு-கட்சி ஆட்சி முறையையும் எதிர்த்துப் போராடி, உரிமைச் சாசனம் 08 எழுதியவர்.[3] 2009ம் ஆண்டு, அரசின் அதிகாரத்தைச் சீர்குலைக்க மற்றவர்களைத் தூண்டினார் என்று இவரைக் குற்றஞ்சாட்டி சீன அரசு பதினொரு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது.[4][5][6] கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவரை 2017 சூன் 26 இல் சீன அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதித்தது. 2017 சூலை 13 அன்று இவர் மருத்துவமனையில் காலமானார்.[7]

லியூ சியாபோ
இயற்பெயர் லியூ சியாபோ
刘晓波
இறப்பு 13 சூலை 2017(2017-07-13) (அகவை 61)
தேசியம் சீன மக்கள் குடியரசு
கல்வி நிலையம் ஜீலின் பல்கலைக்கழகம்
பீஜிங் சாதாரண பல்கலைக்கழகம்
அறியப்படுவது எழுத்தாளர், அரசியல் விமர்சகர், மனித உரிமைச் செயற்பாட்டாளர்.
குறிப்பிடத்தக்க விருதுகள் 2010 நோபெல் அமைதிப் பரிசு

உரிமைச் சாசனம் 08

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
  1. "Verdict Against Liu Xiaobo". International PEN. Archived from the original on 8 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 11 January 2012.
  2. "Liu Xiaobo: Prominent China dissident dies". BBC. 13 July 2017.
  3. Biography of Liu Xiaobo. Encyclopædia Britannica. 2010.
  4. Frances Romero, Top 10 Political Prisoners பரணிடப்பட்டது 2010-10-11 at the வந்தவழி இயந்திரம், Time, 15-11-2010.
  5. Mark McDonald, An inside look at China's most famous political prisoner, த நியூயார்க் டைம்ஸ், 23-07-2012.
  6. Congressional-Executive Commission on China, Political Prisoner Database:Liu Xiaobo பரணிடப்பட்டது 2012-10-16 at the வந்தவழி இயந்திரம்.
  7. "Liu Xiaobo: Jailed Chinese dissident has terminal cancer". BBC News. 26-06-2017. {{cite web}}: Check date values in: |date= (help)

வார்ப்புரு:அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர்கள் 2001–2025

"https://wiki1.tamilar.wiki/index.php?title=லியூ_சியாபோ&oldid=28612" இருந்து மீள்விக்கப்பட்டது