1991 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்

1991 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் அல்லது ஐந்தாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் (5th SAF Games) இலங்கையில் கொழும்பு நகரில் 1991 டிசம்பர் 22 முதல் டிசம்பர் 31 வரை நடைபெற்றது. இப்போட்டியில் மொத்தம் 946 வீரர்கள் பங்கேற்றனர். போட்டியை நடத்திய இலங்கையின் சார்பில் 249 வீரர்கள் போட்டியிட்டனர். இப்போட்டிகளில் 64 தங்கப் பதக்கங்களை வென்று இந்தியா முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. போட்டியை நடத்திய இலங்கை இரண்டாமிடத்தையும் பாக்கிஸ்தான் மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டது.

பங்குபற்றிய நாடுகள்

ஒதுக்கப்பட்ட பதக்கங்கள்

  • போட்டியில் ஒதுக்கப்பட்ட தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை - 142
  • வெள்ளிப் பதங்களின் எண்ணிக்கை - 142
  • வெண்கலப் பதங்களின் எண்ணிக்கை - 163
  • மொத்தப் பதக்கங்கள் - 447

விளையாட்டுக்கள்

அதிகாரபூர்வமாக 10 விளையாட்டுக்கள் இடம்பெற்றன. அவை:

பதக்க நிலை

1   இந்தியா 64 59 41 164
2   இலங்கை 44 34 40 118
3   பாக்கித்தான் 28 32 25 85
4   வங்காளதேசம் 4 8 28 40
5 வார்ப்புரு:நாட்டுத் தகவல் நேபாளம் 2 8 29 39
6   மாலைத்தீவுகள் 0 1 0 1
7 வார்ப்புரு:நாட்டுத் தகவல் பூட்டான் 0 0 0 0

ஆதாரம்

  • டெயிலிநியுஸ், டிசம்பர் 19, 1991 - சனவரி 03. 1992
  • 'சாப்' விளையாட்டுத் தகவல்கள் (சிங்கள மூலம்) -ராஜா கட்டுகம்பொல ISBN 955-99854-0-X

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:SAFGames