அங்கிதா தாஸ்
அங்கிதா தாஸ் (Ankita Das) (பிறப்பு:17 சூலை 1993) என்பவர் மேற்கு வங்காளத்தின் சிலிகுரியைச் சேர்ந்த இந்திய மேசைப்பந்தாட்ட வீரர். இவர் 2012 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் கலந்துகொண்டார்.
| அங்கிதா தாஸ் | |
|---|---|
| தேசியம் | |
| விளையாடும் விதம் | வலது கை |
| கழகம் | ஒய்எம்ஏ, சிலிகுரி, இந்தியா |
| பிறப்பு | 17 சூலை 1993 இந்தியா மேற்கு வங்காளம், சிலிகுரி |
ஆரம்பகால வாழ்க்கை
இவர் அசிம் குமார் தாஸ் மற்றும் சங்கீத தாஸ் தம்பதியருக்கு 17 சூலை 1993 இல் மேற்கு வங்கம், டார்ஜீலிங் நகரில் பிறந்தார். இவர் சிலிகுறி கல்லூரியில் பி. ஏ பட்டம் பெற்றவர்[1]
வாழ்க்கை
அங்கிதா தாஸ், 75ஆவது மூத்தோர் மேசைப்பந்தாட்ட நிகழ்வில் முதன்மை வெற்றியாளராக வெற்றிக் கனியைப் பறித்தார்.[2]
மேற்கோள்கள்
- ↑ "Ankita Das profile". Veethi.com. Retrieved 31 July 2013.
- ↑ "Sanil, Ankita are National champs". Retrieved 30 March 2014.
வெளி இணைப்புகள்
- Ankita Das bio
- Ankita Das Photo Gallery at Veethi