அடாசி பருவா (Atasi Barua) 20 ஆம் நூற்றாண்டின் முக்கிய இந்திய பெண் ஓவியர்களில் ஒருவர். இவர் இரவீந்திரநாத் தாகூரின் கொள்ளுப் பேத்தி ஆவார்.[1] இந்தியா, நேபாளம், இலங்கை, தெகுரான், கெய்ரோ, பேங்காக், தோக்கியோ மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்ற இடங்களிலும் இவரது படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[2][3] இவரது ஓவியங்கள் பொதுவாக பாரம்பரியக் கருப்பொருள்களைக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் இவரது நுட்பங்களும் யதார்த்தத்தின் கலவையைக் காட்டுகின்றன. இவரது கலையில் புத்த மதத்தைப் பற்றிய குறிப்புகள் நிறைய உள்ளன.

இளமை வாழ்க்கை

இவர் 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தியதி இந்தியாவில் . மேற்கு வங்காளத்தில் சாந்திநிகேதனில் ஆசித் குமார் ஆல்தார் சரோஜ்பாசினி தேவி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார்.

கலை ஆர்வம்

இவர் தனது இளம் வயதிலேயே தனது தாயாரின் மறைவுக்குப்பின் ஓவியம் வரையத் தொடங்கினார். பிரபல ஓவியரான இவரது தந்தை, தொடர்ந்து அவரை ஓவியம் வரைய ஊக்குவித்தார். இலக்னோவில் உள்ள லா மார்டினியர் கல்லூரியில் படித்தார்.அவர் கலைகளின் பல்வேறு நுட்பங்களைக்கற்றுக்கொண்டு விரைவில் ஒரு திறமையான ஓவியக்கலைஞரானார்.

கலைத்துறை வாழ்க்கை

கொல்கத்தா மாநகரில் நடைபெற்ற நுண்கலை அகாதமியின் 11வது ஆண்டு கண்காட்சியில் தனது ஓவியங்களுக்காக பரிசு வென்றதையடுத்து இவர் சர்வதேச கவனத்தைப் பெறத் தொடங்கினார். இவரது ஓவியங்கள் ஓ.சி. கங்குலி மற்றும் பலரது பாராட்டுக்களைப்பெற்றது. இவரும் இவரது கணவரும் தெற்காசியாவில் நிறைய பயணம் செய்து பல மாநாடுகளில் கலந்து கொண்டனர். இவர் சந்தித்த பல பிரபலமான ஆளுமைகள் மற்றும் அறிஞர்களின் உருவப்படங்களையும் ஓவியமாக்கினார்.

இவரது கலைப்படைப்புகளில் பெரும்பாலானவை புத்தரின் வாழ்க்கையிலிருந்து உத்வேகம் பெற்றவையாகும்

இறப்பு

இவர் 2016 ஆம் ஆண்டு சூன் 26 ஆம் தியதி இறந்தார்.

மேற்கோள்கள்

  1. Das, Shilpi (17 March 2019). "Rediscovering the art of Atasi Barua". The Heritage Lab (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 17 April 2019.
  2. Tiwari, Vinita (15 January 2019). "Gallery 88 to showcase artwork of father-daughter duo Asit Kumar Haldar and Atasi Barua". இந்தியன் எக்சுபிரசு. Retrieved 6 April 2019.
  3. . https://www.indulgexpress.com/culture/art/2019/jan/15/exhibition-on-asit-kumar-haldar-and-atasi-baruas-line-drawings-starting-today-12152.html. 
"https://tamilar.wiki/w/index.php?title=அடாசி_பருவா&oldid=238808" இலிருந்து மீள்விக்கப்பட்டது