அத்தியழல் (Osteitis) என்பது எலும்புகளில் ஏற்படும் அழற்சியைப் பொதுவாகக் குறிக்கும்[1]. இத்தகு அழற்சி நோய்த்தொற்று, சிதைவு, பேரதிர்ச்சி ஆகியவற்றினால் ஏற்படலாம். வீக்கம், மிருதுத்தன்மை, மழுங்கிய வலி, தோல் சிவத்தல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும். இந்நோயினால் எலும்பு விரிவடையலாம். அத்தியழல், நீண்டகால நாசிப்புரையழற்சியில் (chronic rhinosinusitis) நோய் குணமடையாததற்கு ஒரு சாத்தியக்கூறாக உள்ளது[2].

அத்தியழல்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
ஐ.சி.டி.-9730.2
நோய்களின் தரவுத்தளம்30720
ம.பா.தD010000
படிமம்:Osteitis Fibrosis Cystica.jpg
அத்தியழல் திசுவியல் படம். இழைமத்தடிப்பு (Fibrosis), இணைப்புத் திசுயிடைப் புழை வழி (intratrabecular tunnels) ஆகியவைப் படத்தில் குறிக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

  1. "osteitis". Retrieved 14 சூன் 2014.
  2. Bhandarkar ND, Sautter NB, Kennedy DW, Smith TL. (May 2013). "Osteitis in chronic rhinosinusitis: a review of the literature.". Int Forum Allergy Rhinol. 3 (5): 355-63. doi:10.1002/alr.21118. http://www.ncbi.nlm.nih.gov/pubmed/23258589. 
"https://tamilar.wiki/w/index.php?title=அத்தியழல்&oldid=240954" இலிருந்து மீள்விக்கப்பட்டது