அபிராமபுரம்
அபிராமபுரம் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2]
அபிராமபுரம் | |
|---|---|
அபிராமபுரம், சென்னை மாவட்டம், தமிழ்நாடு | |
| ஆள்கூறுகள்: 13°01′52″N 80°15′28″E / 13.0311°N 80.2579°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | சென்னை |
| ஏற்றம் | 31.44 m (103.15 ft) |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 600018[1] |
| புறநகர்ப் பகுதிகள் | மயிலாப்பூர், மேற்கு மாம்பலம், தியாகராய நகர், நந்தனம், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, இராஜா அண்ணாமலைபுரம், மந்தைவெளி |
| மக்களவைத் தொகுதி | தென் சென்னை |
| சட்டமன்றத் தொகுதி | மயிலாப்பூர் |
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 31.44 மீ. உயரத்தில் அமையப் பெற்றுள்ள அபிராமபுரத்தின் புவியியல் ஆள்கூறுகள், (13°01′52″N 80°15′28″E / 13.0311°N 80.2579°E) ஆகும்.
கல்வி
பள்ளிகள்
நூறு ஆண்டுகளை நிறைவு செய்த 'சென்னை நடுநிலைப் பள்ளி' என்ற மாநகராட்சிப் பள்ளி ஒன்று அபிராமபுரம் பகுதியில் அமைந்துள்ளது.[3]
சமயம்
அபிராமபுரத்தில் 'புனித இளைப்பாற்றி மாதா ஆலயம்' என்ற கிறித்தவ ஆலயம் உள்ளது.[4]
அரசியல்
அபிராமபுரம் பகுதியானது, மயிலாப்பூர் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, தென் சென்னை மக்களவைத் தொகுதி சார்ந்தது.[5]
மேற்கோள்கள்
- ↑ [1]
- ↑ "Live Chennai: Know about the interesting new addition to the busy Abiramapuram locality in Chennai?,Know about the interesting new addition to the busy Abiramapuram locality in Chennai?". https://www.livechennai.com/detailnews.asp?newsid=68400.
- ↑ Team, MyTimes (2025-03-01). "MYLAPORE TIMES - Chennai Middle School in Abiramapuram celebrates its centenary. 140 children study here" (in en-US). https://www.mylaporetimes.com/2025/03/chennai-middle-school-in-abiramapuram-celebrates-its-centenary-140-children-study-here/.
- ↑ Team, MyTimes (2025-05-12). "MYLAPORE TIMES - Our Lady of Visitation Church on St Mary's Road, Abiramapuram has been shut 'temporarily'" (in en-US). https://www.mylaporetimes.com/2025/05/our-lady-of-visitation-church-on-st-marys-road-abiramapuram-has-been-shut-temporarily/.
- ↑ "Abhiramapuram Locality". www.onefivenine.com. Retrieved 2025-06-01.