அம்பை - 15 (ASD 15) எனப்படும் இந்த நெல் வகை, ஐ ஆர் - 20 நெல் இரகத்தையும், ஐ ஆர் - 22 நெல் இரகத்தையும், (IR 20 / IR 22) இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]

அம்பை - 15
ASD 15
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
ஐ ஆர் - 20 x ஐ ஆர் - 22
வகை
புதிய நெல் வகை
காலம்
115 - 125 நாட்கள்
மகசூல்
4600 கிலோஎக்டேர்
வெளியீடு
1979
வெளியீட்டு நிறுவனம்
TNAU, அம்பாசமுத்திரம்
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

வெளியீடு

தமிழக நெல்லை மாவட்டத்தின், அம்பையில் அமைந்துள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (Rice Research Station, Ambasamudram),[2] 1979 ஆம் ஆண்டு, இவ்வகை நெல்லை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[1]

காலம்

குறுகியகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 115-125 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது.[1] இதுபோன்ற குறுங்கால நெற்பயிர்கள், நவரை, சொர்ணவாரி, கார், குறுவை, மற்றும் பின்தாளடி போன்ற பட்டங்கள் (பருவங்கள்) ஏற்றதாக கூறப்படுகிறது.[3]

சாகுபடி

நீர்ப்பாசன வசதியுள்ள, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சாகுபடி செய்ய உகந்தப் பகுதியாக கூறப்படும் அம்பை - 15 நெல் வகை, புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.[2]

சிறப்புப் பண்புகள்

  • இந்த நெல் இரகம் ஒரு ஏக்கருக்கு 4600 கிலோவரை ( 4.6 t/ha) மகசூல் தரக்கூடியது.
  • இந்நேல்லின் அரிசி, வெள்ளை நிறத்தில் மிதமான சன்ன வடிவில் காணப்படுகிறது.[1]

இவற்றையும் காண்க

சான்றுகள்

  1. 1.0 1.1 1.2 1.3 "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்). 2017. Retrieved ஆகத்து 9, 2017.
  2. 2.0 2.1 "Rice Knowledge Management Portal ASD 15". www.rkmp.co.in (ஆங்கிலம்). 2011. Archived from the original on 2020-08-03. Retrieved 2017-08-09.
  3. "Paddy Varieties of Tamil Nadu". www.agritech.tnau.ac.in (ஆங்கிலம்). 2017. Retrieved 2017-08-09.
"https://tamilar.wiki/w/index.php?title=அம்பை_-_15_(நெல்)&oldid=250547" இலிருந்து மீள்விக்கப்பட்டது