அம்பை - 16 (நெல்)
அம்பை - 16 (ASD 16) எனப்படும் இந்த நெல் வகை, ஆடுதுறை - 31 நெல் இரகத்தையும், கோவை - 39 நெல் இரகத்தையும், (ADT 31 / Co 39) இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]
| அம்பை - 16 ASD 16 |
|---|
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| ஏடிடீ-31 x கோ-39 |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 110 - 115 நாட்கள் |
| மகசூல் |
| 5600 கிலோஎக்டேர் |
| வெளியீடு |
| 1986 |
| வெளியீட்டு நிறுவனம் |
| TNAU, அம்பாசமுத்திரம் |
| மாநிலம் |
| தமிழ் நாடு |
| நாடு |
வெளியீடு
தமிழக நெல்லை மாவட்டத்தின், அம்பையில் அமைந்துள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (Rice Research Station, Ambasamudram),[2] 1986 ஆம் ஆண்டு, இவ்வகை நெல்லை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[3]
காலம்
குறுகியகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 110 - 115 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது.[1] இதுபோன்ற குறுங்கால நெற்பயிர்கள், நவரை, சொர்ணவாரி, கார், குறுவை, மற்றும் பின்தாளடி போன்ற பட்டங்கள் (பருவங்கள்) ஏற்றதாக கூறப்படுகிறது.[4]
சாகுபடி
நீர்ப்பாசன வசதியுள்ள, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சாகுபடி செய்ய உகந்தப் பகுதியாக கூறப்படும் அம்பை - 16 நெல் வகை, புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.[2]
சிறப்புப் பண்புகள்
இவற்றையும் காண்க
சான்றுகள்
- ↑ 1.0 1.1 1.2 "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்). © CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. Retrieved 2017-08-09.
{{cite web}}: Check date values in:|date=(help) - ↑ 2.0 2.1 2.2 "Rice Knowledge Management Portal ASD 16". www.rkmp.co.in (ஆங்கிலம்). © 2011. Retrieved 2017-08-09.
{{cite web}}: Check date values in:|date=(help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ CROP VARIETIES RELEASED BY THE - TAMIL NADU AGRICULTURAL UNIVERSITY FROM 1971 to 2003 - I. AGRICULTURE
- ↑ "Paddy Varieties of Tamil Nadu". www.agritech.tnau.ac.in (ஆங்கிலம்). © TNAU 2017. Retrieved 2017-08-09.
{{cite web}}: Check date values in:|date=(help); Text "Long duration varieties" ignored (help)