அம்பை - 3 (ASD 3) பிரபலமாக வீதி விடங்கன் (Veedhividangan) எனப்படும் இந்த நெல் வகை, நல் விதைத் தேர்வு (Pureline) முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]

அம்பை - 3
ASD 3
வேளாண் பெயர்
வீதி விடங்கன்
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
நல் விதைத் தேர்வு முறை
வகை
புதிய நெல் வகை
காலம்
130 - 135 நாட்கள்
மகசூல்
3000 கிலோ எக்டேர்
வெளியீடு
1944
வெளியீட்டு நிறுவனம்
TNAU, அம்பாசமுத்திரம்
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

வெளியீடு

தமிழக நெல்லை மாவட்டத்தின், அம்பையில் அமைந்துள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (Rice Research Station, Ambasamudram),[2] 1944 ஆம் ஆண்டு, இவ்வகை நெல்லை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[1]

காலம்

மத்தியகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 135 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது.[1] இதுபோன்ற நடு கால நெற்பயிர்கள், முன் சம்பா, சம்பா, பின்சம்பா, தாளடி / பிசாணம், மற்றும் பின் பிசாணம் போன்ற பட்டங்கள் (பருவங்கள்) ஏற்றதாக கூறப்படுகிறது.[3]

சாகுபடி

நீர்ப்பாசன வசதியுள்ள, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சாகுபடி செய்ய உகந்தப் பகுதியாக கூறப்படும் அம்பை - 3 நெல் வகை, புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.[2]

சிறப்புப் பண்புகள்

  • இந்த நெல் இரகம், ஒரு ஏக்கருக்கு 3000 கிலோவரை (3.0 t/ha) மகசூல் தரக்கூடியது.
  • இதன் நெற்பயிர், முதிர்ந்த காலங்களில் நெற்கதிர்கள் சாய்வதில்லை. மேலும் இந்நெல் வகை, வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது.
  • இந்நேல்லின் அரிசி, சிவப்பு நிறத்தில் குட்டையான தடித்த வடிவில் உள்ளது.[1][2]

இவற்றையும் காண்க

சான்றுகள்

  1. 1.0 1.1 1.2 1.3 "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்). 2017. Retrieved 2017-08-05.
  2. 2.0 2.1 2.2 "Rice Knowledge Management Portal ASD 3". www.rkmp.co.in (ஆங்கிலம்). 2011. Retrieved 2017-08-07.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Paddy Varieties of Tamil Nadu". www.agritech.tnau.ac.in (ஆங்கிலம்). 2017. Retrieved 2017-08-07.
"https://tamilar.wiki/w/index.php?title=அம்பை_-_3_(நெல்)&oldid=250555" இலிருந்து மீள்விக்கப்பட்டது