அம்ரா குரேசி (Humra Quraishi) (24 ஏப்ரல் 1955-16 சனவரி 2025) தில்லியைத் தளமாகக் கொண்ட ஒரு இந்திய பத்திரிகையாளரும் எழுத்தாளரும் கட்டுரையாளரும் ஆவார்.[1][2] இவர் அரசியல், சமூகப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தினார், குறிப்பாக காஷ்மீரில் கவனம் செலுத்தினார்.[3] காஷ்மீர்​: தி அன்டோல்ட் ஸ்டோரி, வியூஸ்: யுவர்ஸ் அண்ட் மைன், மீர்: ஏ நாவல் உள்ளிட்ட பல புத்தகங்களை இவர் எழுதியுள்ளார். குஷ்வந்த் சிங் உடன் இணைந்து தி குட், தி பேட், தி ரிடிகுலஸ் போன்ற படைப்புகளையும் இவர் எழுதியுள்ளார்.[4][5]

அம்ரா குரேசி
பிறப்புஏப்ரல் 24, 1955
புடான், உத்தரப்பிரதேசம், இந்தியா
இறப்புசனவரி 16, 2025
பணிஇதழியலாளர்,எழுத்தாளர்

வாழ்க்கை வரலாறு

1955 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாள் உத்தரப்பிரதேசத்தின் புடானில் பிறந்த இவர், இலக்னோவில் உள்ள லோரெட்டோ கான்வென்ட்டில் கல்வி பயின்றார். இவர் தில்லியைச் சேர்ந்த எழுத்தாளரும் கட்டுரையாளரும் ஆவார்.[6] இவர் மோர் பேட் டைம் டேல்ஸ், டிவைன் லீகசி: தாகர்ஸ் & துருபத், மீர், வியூஸ்: யுவர்ஸ் அண்ட் மைன் உள்ளிட்ட பல குறிப்பிடத்தக்க படைப்புகளை எழுதியுள்ளார்.[7]

இறப்பு

2025ஆம் ஆண்டு சனவரி மாதம் 16 அன்று இதய செயலிழப்பு காரணமாக குருகிராமில் உள்ள ஒரு மருத்துவமனையில் குரேசி இறந்தார். இவரது இறுதிச் சடங்கு சனவரி மாதம் 17 அன்று குர்கானில் உள்ள அஞ்சுமான் பாகியாவில் நடைபெற்றன.[8]

மேற்கோள்கள்

  1. "Veteran Journalist and Author Humra Quraishi Passes Away". madhyamamonline.com (in ஆங்கிலம்). 2025-01-17. Retrieved 2025-01-17.
  2. "Veteran journalist, writer Humra Quraishi passes away at 70". The New Indian Express (in ஆங்கிலம்). 2025-01-17. Retrieved 2025-01-17.
  3. "പ്രശസ്ത മാധ്യമപ്രവർത്തക ഹുംറ ഖുറൈശി അന്തരിച്ചു". www.mediaoneonline.com (in மலையாளம்). 2025-01-16. Retrieved 2025-01-17.
  4. Staff, Maktoob (2025-01-16). "Veteran journalist and author Humra Quraishi dies at 70". Maktoob media (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-01-17.
  5. theclarionindia (2022-04-01). "Kashmir Tragedy: It's Wrong to Say Pandits Hounded Out by Muslim Majority". Clarion India (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-01-17.
  6. "Remembering Humra Quraishi: A Trailblazing Journalist and Human Rights Advocate". The Wire (in ஆங்கிலம்). Retrieved 2025-01-18.
  7. "Humra Quraishi, Veteran Journalist, Author, Passes Away At 70". Outlook India (in ஆங்கிலம்). 2025-01-18. Retrieved 2025-01-18.
  8. "Journalist-writer Humra Quraishi dies at 70". The Tribune (in ஆங்கிலம்). Retrieved 2025-01-26.
"https://tamilar.wiki/w/index.php?title=அம்ரா_குரேசி&oldid=250816" இலிருந்து மீள்விக்கப்பட்டது