அலபாண்டைட்டு
அலபாண்டைட்டு (Alabandite) என்பது MnS என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். அலபாண்டைன் என்றும் அழைக்கப்படும் அரிய மாங்கனீசு சல்பைடு கனிமமான இது முன்னதாக மாங்கனீசு பிளெண்டே அல்லது புளூமென்பாசைட்டு என்றும் அழைக்கப்பட்டது. Mn2+S என்ற வேதியியல் இயைபுடன் கனசதுர படிக அமைப்பில் இக்கனிமம் படிகமாகிறது. பொதுவாக பாரிய முதல் சிறுமணி திரட்டுகளாக உருவாகிறது. ஆனால் அரிதாக 1 செ.மீ வரை கனசதுர அல்லது எண்முக படிகங்களாகவும் அலபாண்டைட்டு உருவாகிறது.
| அலபாண்டைட்டு Alabandite | |
|---|---|
பெரு நாட்டில் கிடைத்த எண்முக அல்பாண்டைட்டு படிகங்கள் (அளவு: 60 மி.மீ × 59 மி.மீ × 46 மி.மீ, 204 கிராம்) | |
| பொதுவானாவை | |
| வகை | சல்பைடு கனிமம் |
| வேதி வாய்பாடு | MnS |
| இனங்காணல் | |
| நிறம் | கருப்பு, வெள்ளி சாம்பல், பழுப்பு-கருப்பு |
| படிக இயல்பு | பெரும்பாலும் பெரிய அல்லது துகள் வடிவ; கனசதுர அல்லது எண்முக படிகங்கள் 1 செ.மீ. |
| படிக அமைப்பு | Cubic |
| இரட்டைப் படிகமுறல் | நுண்தகடு {111} |
| பிளப்பு | {100} இல் சரிபிளவு |
| முறிவு | சமமற்றும் ஒழுங்கற்றும் |
| விகுவுத் தன்மை | நொறுங்கும் |
| மோவின் அளவுகோல் வலிமை | 3.5 to 4 |
| மிளிர்வு | துணை உலோகம் |
| கீற்றுவண்ணம் | பச்சை |
| ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகாது, துண்டுகளில் ஒளி கசியும் |
| ஒப்படர்த்தி | 4.053 |
| ஒளியியல் பண்புகள் | சமதிருப்பம் |
| ஒளிவிலகல் எண் | n = 2.70 |
| மேற்கோள்கள் | [1][2] |
பன்னாட்டு கனிமவியல் சங்கம் அலபாண்டைட்டு கனிமத்தை Abd[3] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
வரலாறு
அலபாண்டைட்டு கனிமம் முதன்முதலில் 1784 ஆம் ஆண்டு பிரான்சு-இயோசப் முல்லர் வான் ரீச்சென்சுடீனால் கண்டுபிடிக்கப்பட்டு விவரிக்கப்பட்டது.[4] துருக்கியில் உள்ள அலபாண்டா நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் இவ்விடத்தின் நினைவாக கனிமத்திற்கு அலபாண்டைட்டு எனப் பெயரிடப்பட்டது.[2]
தோற்றம்
அலபாண்டைட்டு கனிமம் வெப்பக் கிளர்ச்சி காரணமாக உருவான பல்லுலோக சல்பைடு விளிம்புகளிலும் குறைந்த வெப்பநிலை மாங்கனீசு படிவுகளிலும் உருவாகிறது. அகாந்தைட்டு, கால்சைட்டு, சால்கோபைரைட்டு, கலீனா, பைரைட்டு, குவார்ட்சு, ரோடோக்ரோசைட்டு, ரோடோணைட்டு, சுபாலரைட்டு மற்றும் பூர்வீக தெலூரியம் ஆகிய கனிமங்களுடன் சேர்ந்து காணப்படுகிறது. சில நேரங்களில் இது விண்கற்களிலும் காணப்பட்டது.[1]
அண்டார்டிகா, அர்கெந்தினா, ஆர்மீனியா, ஆத்திரேலியா, பொலிவியா, பிரேசில், பல்கேரியா, கனடா, சீனா, செக் குடியரசு, பின்லாந்து, பிரான்சு, செருமனி, கானா, கிரீசு, கிரீன்லாந்து, இந்தியா, இத்தாலி, சப்பான், கிர்கிசுத்தான், மெக்சிகோ, நியூசிலாந்து, நார்வே, பெரு, போலந்து, ருமேனியா, உருசியா, சுலோவாக்கியா, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, சுவீடன், சுவிட்சர்லாந்து, தைவான், தான்சானியா, ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, உசுபெகிசுத்தான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் உள்ள பல பகுதிகளில் அலபாண்டைட்டு கிடைக்கிறது. தற்போது அனைத்தும் சேர்ந்து சுமார் 220 அலபாண்டைட்டு கண்டுபிடிப்புத் தளங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
படிகக் கட்டமைப்பு
அலபாண்டைட்டு கனிமம் Fm3m என்ற இடக்குழுவில் உள்ள கனசதுர படிக அமைப்பில் a = 5.22 Å என்ற அணிக்கோவை அளவுருவுடன் படிகமாக்குகிறது.[5] ஓர் அலகு செல்லுக்கு நான்கு வாய்ப்பாட்டு அலகுகள் காணப்படுகின்றன.[1]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 Handbook of Mineralogy
- ↑ 2.0 2.1 Mindat.org
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
- ↑ "www.mineral.hermuz.hu - A Kárpát-övezetben felfedezett ásványok". Archived from the original on 2016-03-03. Retrieved 2010-01-15.
- ↑ American Mineralogist Crystal Structure Database - Alabandite (1991)