ஆயிசா அய்மான்
ஆயிசா எஸ். அய்மான் ஒரு இந்திய நடிகையும் வடிவழகியும் அழகியர் அணிவகுப்புப் போட்டி வெற்றியாளரும் ஆவார். இவர் இந்திய பன்னாட்டு அழகிப் போட்டி 2015-இல் பட்டம் பெற்றார். ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற பன்னாட்டு அழகி 2015 (மிஸ் இன்டர்நேஷனல் 2015) போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1] தேசிய விருது பெற்ற இயக்குநர் மதுர் பண்டார்கரின் பாலிவுட் படமான இந்தியா லாக்டவுன் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். ஆயிசா எஸ். அய்மான் <i>ஜியோ ஸ்டுடியோஸ்</i> தயாரிப்பில் ரன்தீப் ஹூடா நடித்த இன்ஸ்பெக்டர் அவினாஷ் என்ற வலைத் தொடரில் தனது முதல் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். இத்தொடரில் ஆயிஷா அழகான நவீன கால அரச இளவரசியாக நடித்தார்.[2] ஆயிஷா ஏ. கே 47 என்ற மற்றொரு வலைத் தொடரிலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[3]
| ஆயிசா அய்மான் | |
|---|---|
| அழகுப் போட்டி வாகையாளர் | |
| பட்டம் | மிஸ் இன்டர்நேசனல் பன்னாட்டளவு 2015 |
| செயல் ஆண்டுகள் | 2015 முதல் தற்போது வரை |
| முக்கிய போட்டி(கள்) | கிளமானந்த் சூப்பர்மாடல் இந்தியா 2015 (வெற்றியாளர்) (பேனசோனிக் அழகுத் தூதுவர் 2015) மிஸ் விசிட் ஜப்பான் அழகுத் தூதுவர் 2015 கிளமானந்த் சூப்பர்மாடல் இந்தியா 2015 ஃபெமினா இந்திய அழகி 2013 (முதல் 24 இல் ஒருவர்) |
பிறப்பு
ஆயிசா எஸ். அய்மான் 19 செப்டம்பர் 1996 அன்று பீகாரின் நவாடா மாவட்டத்தில் பிறந்தார்.[4]
அழகிப் போட்டி அணிவகுப்பு நிகழ்வுகளில் பங்கேற்பு
2015 ஆம் ஆண்டிற்கான பானாசோனிக் அழகுத் தூதர் விருதை பானாசோனிக் அமைப்பு மற்றும் மிஸ் விஸிட் ஜப்பான் சுற்றுலா தூதர் விருதுகளை ஜப்பான் சுற்றுலா மற்றும் பன்னாட்டு கலாச்சார சங்கம் மிஸ் இன்டர்நேஷனல் போட்டியில் வழங்கியது. வடிவழகுத் துறையில் இவரது பங்களிப்பைப் பொருட்படுத்தாமல், 2018 மே மாதத்தில் தென் கொரியாவின் சியோலில் நடைபெற்ற ஆசிய வடிவழகர் விழாவில் ஆசிய ஸ்டார் மாடல் விருது சுப்ரியா ஐமானுக்கு வழங்கப்பட்டது.[5] இவர் 2019 ஆம் ஆண்டல் இந்திய சாதனையளார்களுக்கான விதுதையும் 2020 ஆம் ஆண்டில் பெண் சாதனையாளர்களுக்கான விருதினையும் பெற்றார்.[6]
கிளமானந்த் சூப்பர்மாடல் இந்தியா 2015
அக்டோபர் 2015 இல், ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற மிஸ் இன்டர்நேஷனல் 2015 இல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த கிளமானந்த் சூப்பர்மாடல் இந்தியாவால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஜடாலேகா மல்கோத்ராவிற்குப் பிறகு மிஸ் இன்டர்நேசனல் இந்தியா ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாமவர் ஆவார்.
பன்னாட்டு அழகி 2015 (மிஸ் இன்டர்நேசனல் 2015)
அக்டோபர் 16 முதல் நவம்பர் 5 வரை ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற மிஸ் இன்டர்நேஷனல் 2015 போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய இவர், 2015 ஆம் ஆண்டின் பானாசோனிக் அழகு தூதராக பானாசோனிக் மற்றும் ஜப்பான் சுற்றுலாத் துறையால் ஜப்பான் சுற்றுலா தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [citation needed][7][8]
திரைப்படவியல்
திரைப்படங்கள்
இவர் இன்ஸ்பெக்டர் அவினாஷ் திரைப்படத்திற்காகப் பணிபுரியும் முன் தனது நந்தினி கதாபாத்திரத்திற்காக இவரது சமகாலத்தில் வாழ்ந்த காயத்ரி தேவி என்ற புகழ் பெற்ற ஆடையலங்கார நிபுணர் மற்றும் வடிவழகரின் வாழ்க்கை வரலாற்று நூலைப் படித்ததாகத் தெரிவித்திருந்தார். [9]
| ஆண்டு | தலைப்பு | பாத்திரம் | மொழி | குறிப்புகள் | ரெப். |
|---|---|---|---|---|---|
| 2022 | இந்தியா லாக்டௌன் | காம்லி | இந்தி | [10][11] | |
| 2023 | இன்ஸ்பெக்டர் அவினாஷ் | நந்தினி | இந்தி | [12] | |
| டி. பி. ஏ. | மிஸ் மசகலி திரிபாதி | கல்லி திரிபாதி | இந்தி | [13] |
மேற்கோள்கள்
- ↑ "Miss India - Miss Diva - World Pageants - Indiatimes.com". beautypageants.indiatimes.com. Archived from the original on 2016-08-08.
- ↑ "Ayeesha Aiman wraps up shoot for her new web series Inspector Avinash". https://theprint.in/ani-press-releases/ayeesha-aiman-wraps-up-shoot-for-her-new-web-series-inspector-avinash/912628/.
- ↑ "Ayeesha S Aiman Bags a Web Series AK 47 with Endemol Shine". https://www.dnaindia.com/entertainment/report-ayeesha-s-aiman-bags-a-web-series-ak-47-with-endemol-shine-2967610.
- ↑ राज, अमन. "मधुर भंडारकर की फिल्म में अदा बिखेरेंगी नवादा की आयशा, 2 दिसंबर को रिलीज हो रही 'इंडिया लॉकडाउन". www.abplive.com.
- ↑ "Supriya Aiman awarded Asia Model Star | Beauty Pageants- Times of India Videos". timesofindia.indiatimes.com. Archived from the original on 2018-05-14.
- ↑ Dinesh Sudarshan Soi. "Biography of Ayeesha S. Aiman". IMDb. Retrieved 16 February 2025.
- ↑ "Pictures of Miss India International Ayeesha S Aiman take the internet by storm- The Etimes Photogallery". https://photogallery.indiatimes.com/yearendershow/93936094.cms.
- ↑ "Bakarganj girl takes flight for Japanese ramp glory".
- ↑ "Ayeesha S Aiman read Gayatri Devi's biography". Times of India. 8 June 2023. Retrieved 16 February 2025.
{{cite web}}: Check|archive-url=value (help) - ↑ "Ahmedabad News – Latest & Breaking Ahmedabad News". Ahmedabad Mirror.
- ↑ Bhirani, Garvit. "Former Miss India International Ayeesha S Aiman Sets The Temperature High With Her Upcoming 'India Lockdown'". Box Office Worldwide.
- ↑ "Ayeesha Aiman wraps up shoot for her new web series Inspector Avinash - Articles". ZEE5.
- ↑ "First look of Miss Massakalli Tripathi has been released - Watch now | Business Upturn".