ஆர்டினைட்டு
ஆர்டினைட்டு (Artinite) என்பது Mg2(CO3)(OH)2•3H2O. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். நீரேறிய மக்னீசியம் கார்பனேட்டு கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. வெண்மை நிறத்தில் மென்மையான ஒற்றைச்சரிவச்சு படிகவடிவில் பட்டகம் போன்ற படிகங்களாக இது உருவாகிறது.
| ஆர்டினைட்டு Artinite | |
|---|---|
| படிமம்:Artinite - Atlas mine1, San Benito, California, USA.jpg கலிபோரினியாவின் இத்ரியா மாவட்டத்தில் கிடைத்த ஆர்டினைட்டு | |
| பொதுவானாவை | |
| வகை | கார்பனேட்டு கனிமம் |
| வேதி வாய்பாடு | Mg2(OH)2CO3•3H2O |
| இனங்காணல் | |
| நிறம் | வெண்மை |
| படிக இயல்பு | ஊசி படிகங்கள், இழைகள், திராட்சைக் கொத்து பட்டைகள், கோளங்கள் |
| படிக அமைப்பு | ஒற்றைச்சரிவச்சு |
| பிளப்பு | {100} இல் தெளிவு; {001} இல் நன்று. |
| மோவின் அளவுகோல் வலிமை | 2.5 |
| மிளிர்வு | கண்ணாடி பளபளப்பு, பட்டு |
| கீற்றுவண்ணம் | வெண்மை |
| ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் |
| ஒப்படர்த்தி | 2.01 - 2.03 |
| ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (-) |
| ஒளிவிலகல் எண் | nα = 1.488 - 1.489 nβ = 1.533 - 1.534 nγ = 1.556 - 1.557 |
| இரட்டை ஒளிவிலகல் | δ = 0.068 |
| மேற்கோள்கள் | [1][2][3] |
பன்னாட்டு கனிமவியல் சங்கம் ஆர்டினைட்டு கனிமத்தை Art[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
பெரும்பாலும் ஆரச்சமச்சீர் வரிசைகளில் அல்லது ஏடுகளாகப் படிந்த நிலையில் இவை காணப்படுகின்றன. மோவின் அளவுகோலில் இதன் கடினத்தன்மை மதிப்பு 2.5 என்றும் ஒப்படர்த்தி மதிப்பு 2 என்றும் அளவிடப்படுகிறது.
குறைந்த வெப்பநிலை நீர்வெப்ப நரம்புகளிலும், செர்பெண்டைன் வகை தீப்பாறைகளிலும் ஆர்ட்டினைட்டு கனிமம் தோன்றுகிறது. புரூசைட், ஐதரோமாக்னசைட்டு, பைரோவாரைட்டு, கிரிசோடைல், அரகோனைட்டு, கால்சைட்டு, டோலமைட்டு மற்றும் மாக்னசைட்டு ஆகிய கனிமங்களுடன் சேர்ந்து ஆர்டினைட்டு தோன்றுகிறது [1].
முதன்முதலில் 1902 ஆம் ஆண்டில் இத்தாலியின் லோம்பார்டி நிர்வாக மண்டலத்தில் ஆர்டினைட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இத்தாலிய கனிமவியலாளர் எட்டோர் ஆர்டினி (1866-1928) நினைவாக ஆர்டினைட்டு எனக் கனிமத்திற்குப் பெயரிடப்பட்டது [2]
.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 Handbook of Mineralogy
- ↑ 2.0 2.1 Artinite on Mindat.org
- ↑ Artinite on Webmineral
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.