ஆர். டி. அரசு
ஆர். டி. அரசு (R. T. Arasu) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் காஞ்சிபுரம் மாவட்டம் இரும்பேடு கிராமத்தினைச் சேர்ந்தவர். பல் மருத்துவத்தில் இளநிலைப் பட்டம் பெற்றுள்ள அரசு திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தவர். இவர், 2016ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் செய்யூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]
ஆர். டி. அரசு | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 2016–2021 | |
| முன்னையவர் | வி. எஸ். ராஜி |
| பின்னவர் | பனையூர் பாபு |
| தொகுதி | செய்யூர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 4 மே 1967 இரும்பேடு |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
| வாழிடம் | இரும்பேடு, மதுராந்தகம் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் |
| தொழில் | பல் மருத்துவர் |
தேர்தல் செயல்பாடு
2016
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | ஆர். டி. அரசு | 63,446 | 37.51% | ||
| அ.இ.அ.தி.மு.க. | ஏ. முனுசாமி | 63,142 | 37.33% | -18.26% | |
| விசிக | எழில் கரோலின் | 17,927 | 10.60% | ||
| பாமக | சடையப்பன் வி | 17,892 | 10.58% | ||
| நோட்டா | நோட்டா | 1,827 | 1.08% | ||
| பா.ஜ.க | பி. சம்பத் | 1,559 | 0.92% | -0.06% | |
| நாதக | ஏ. தசரதன் | 919 | 0.54% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 304 | 0.18% | -18.69% | ||
| பதிவான வாக்குகள் | 1,69,134 | 80.11% | -0.90% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 2,11,135 | ||||
| அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | -18.08% | |||