ஆலம் சா
அலா-உத்-தின் ஆலம் சா (Ala-ud-Din Alam Shah) ( ஆ. 1445–1451 ) தில்லி சுல்தானகத்தை ஆண்ட சையிது வம்சத்தின் நான்காவதும் மற்றும் கடைசி ஆட்சியாளரும் ஆவார். இவர் பெரும்பாலும் திருக்குர்ஆனைப் படிப்பதிலேயே தனது நேரத்தைச் செலவிட்டார் .
| அலா-உத்-தின் ஆலம் சா | |||||
|---|---|---|---|---|---|
| சுல்தான் | |||||
| 28வது தில்லி சுல்தான் | |||||
| ஆட்சி | 1 ஜனவரி 1445 – 19 ஏப்ரல் 1451 | ||||
| முன்னிருந்தவர் | முகமது சா | ||||
| பின்வந்தவர் | பக்லுல் கான் லௌதி | ||||
| |||||
| பிறப்பு | 1405 | ||||
| இறப்பு | ஜூலை 1478 பதாவுன் | ||||
| சமயம் | இசுலாம் | ||||
வாழ்க்கை
அலா உத்-தின் என்ற பெயரில் பிறந்த இவர் தனது தந்தை முகமது சாவுக்குப் பிறகு அரியணை ஏறினார். பின்னர், ஆலம் சா ("உலக ராஜா") என்ற ஆட்சிப் பெயரைப் பெற்றார். ஆலம் சா, 1448 இல் அரியணை பொறுப்பை கைவிட்டு தில்லியை விட்டு பபதாவுனுக்குச் சென்று ஓய்விலிருந்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, லௌதி வம்சத்தை நிறுவி [1] [2] பக்லுல் கான் லௌதி 19 ஏப்ரல் 1451 அன்று லௌதி வம்சத்தின் சுல்தானானார் [3][4] [5] [6]
மேற்கோள்கள்
- ↑ Asher, Catherine B. (2006). India Before Europe. Cambridge University Press. p. 116. ISBN 9780521005395.
- ↑ Sengupta, Sudeshna (2008). History & Civics 9. Ratna Sagar (P) Limited. p. 126. ISBN 9788183323642.
- ↑ Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. ISBN 978-9-38060-734-4.
- ↑ Bosworth, Clifford Edmund (1996). The New Islamic Dynasties. Columbia University Press. p. 304. ISBN 978-0231107143.
- ↑ EB.
- ↑ Jackson 2003, ப. 322.
குறிப்புகள்
- Jackson, Peter (2003). The Delhi Sultanate : a political and military history (1st ed.). Cambridge: Cambridge University Press. ISBN 9780521543293.
- "Sayyid dynasty". Encyclopedia Britannica (in ஆங்கிலம்).