கருநாடக இசையில், ஆவர்த்தனம் என்பது தாள வட்டத்தைக் குறிக்கும். ஒரு தாளத்திற்கு ஏற்பட்ட லகு, திருதம் போன்ற அங்கங்களை ஒழுங்கு முறைப்படி ஒரு முறை போட்டால் அது ஒரு ஆவர்த்தனம் ஆகும்.

எடுத்துக்காட்டு: ஆதி தாளத்திற்கு ஏற்பட்ட அங்கங்களான ஒரு சதுஸ்ர லகு, இரண்டு துருதங்களை (மொத்த அட்சரம் 08) ஒழுங்கு முறைப்படி போட்டால் அது ஒரு ஆவர்த்தனம் ஆகும்.

ஆவர்த்தன முடிவுக் குறி // ஆகும்.

"https://tamilar.wiki/w/index.php?title=ஆவர்த்தனம்&oldid=268933" இலிருந்து மீள்விக்கப்பட்டது