ஆ. கோ. சம்பத்
ஆ. கோ. சம்பத் (A. G. Sampath) என்பவர் என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும் முன்னாள் தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1989[1][2]ஆம் ஆண்டு மற்றும் 1996 [3] ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க. வேட்பாளர்) வேட்பாளராக முகையூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆ. கோ. சம்பத் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1996–2001 | |
| முன்னையவர் | ஆர். சாவித்திரி அம்மாள் |
| பின்னவர் | ஜி. கோதண்டராமன் |
| தொகுதி | முகையூர் |
| பதவியில் 1989–1991 | |
| முன்னையவர் | எம். சந்திரசேகர் |
| பின்னவர் | ஆர். சாவித்திரி அம்மாள் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 15 அக்டோபர் 1952 சென்னை |
| வாழிடம் | முகையூர், விழுப்புரம் |
| தொழில் | விவசாயம் |
2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தி.மு.க. இத்தொகுதியினை பாட்டாளி மக்கள் கட்சிக்கு (பா.ம.க.) ஒதுக்கியதால் ஏ. ஜி. சம்பத் கட்சியிலிருந்து விலகினார். முன்னதாக இந்தத் தொகுதியில் இவரது தாயார் ஏ. ஜி. பத்மாவதி இருமுறையும் மற்றும் இவருடைய தந்தை ஆ. கோவிந்தசாமி ஒரு முறையும் வெற்றி பெற்றிருந்தனர்.[4]
மேற்கோள்கள்
- ↑ 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 63.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. p. 6. Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 2017-05-06.
- ↑ "ADMK, DMK facing rebellion". Rediff. 2 April 2006. http://m.rediff.com/news/report/tn/20060402.htm. பார்த்த நாள்: 2017-05-13.