இந்திய அணில்
படிமம்:Funambulus palmarum (Bengaluru).jpg
படிமம்:Three Striped Palm Squirrel (Funambulus palmarum).wav
படம் பெங்களூரிலும் ஒலிக்கோப்பு திருப்பதியிலும் பதிவு செய்யப்பட்டது
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
கொறிணி
குடும்பம்:
சையூரிடே
பேரினம்:
பனம்புலசு
துணைப்பேரினம்:
பனம்புலசு
இனம்:
ப. பால்மரம்
இருசொற் பெயரீடு
பனம்புலசு பால்மரம்
(லின்னேயஸ், 1766)
துணையினம்[2]
  • ப. பா. பால்மரம்
  • ப. பா. புரோடெய்
  • ப. பா. ரோபர்ட்சோனி
வேறு பெயர்கள்
  • சையூரசு புரோடி பிளைத், 1849
  • சையூரசு இண்டிகசு பாடம், 1835
  • சையூரசு கெலார்டி லேயர்ட், 1851
  • சையூரசு பால்மரம் லின்னேயஸ், 1766
  • சையூரசு பென்சிலடசு லீச், 1814

இந்திய அணில் (Indian palm squirrel, "Funambulus palmarum") என்பது ஒரு வகை அணில் ஆகும். இது மூன்று கோடுகளுள்ள அணில் என அழைக்கப்படுகின்றது. இது செல்லப்பிராணியாகவும் வளர்க்கப்படுகின்றது.[3] இது இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் காணப்படுகின்றது. 19ம் நூற்றாண்டு பிற்பகுதியில் மேற்கு ஆவுத்திரேலியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டு, இயற்கையாக மற்ற விலங்குகளால் குறைவாக வேட்டையாடபப்டுவதால் சிறிய தீங்குயிராக மாறி, அழிக்கப்பட இலக்கு வைக்கப்பட்டது.[4] இதன் நெருங்கிய ஐந்து கோடுகளுள்ள அணில் வட இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.

படிமம்:Indian Palm Squirrel (Funambulus palmarum).jpg
இந்தியப் பனை அணில், பெங்களூரு, இந்தியா

வாழ்க்கை சுழற்சி

இந்திய பனை அணில் பல்வேறு இனப்பெருக்க நடத்தைகளை வெளிப்படுத்துகிறது. சில சுழற்சி காலச் செயல்பாடுகளைக் காட்டுகின்றன. மற்றவை தொடர்ச்சியான இனப்பெருக்கச் செயல்பாட்டைக் காட்டுகின்றன.[5] கர்ப்ப காலம் 34 நாட்கள் ஆகும். இலையுதிர் காலத்தில் புற்களில் கட்டப்படும் கூடுகளில் இனப்பெருக்கம் நடைபெறுகிறது. இரண்டு அல்லது மூன்று குட்டிகளை பொதுவாக ஈணுகின்றன. குட்டிகள் 10 வாரங்களுக்குப் பாலூட்டப்பட்டு வளர்க்கப்படும் குட்டிகள் 9 மாதங்களில் பாலின முதிர்ச்சியடைகின்றன. முதிர்ச்சியடைந்த அணிலின் எடை 100 கிராம். இவற்றின் ஆயுட்காலம் பொதுவாக 5.5 ஆண்டுகள் வரை இருக்கலாம்.[6]

படிமம்:Baby Squirrels.png
மூன்று வரி அணிலின் ஓரிணை குட்டிகள்

துணை இனங்கள்

பொதுவாக நான்கு துணையினங்கள் புவியியல் பரவலின் படி விவரிக்கப்படுகின்றன. ஆனால் இன்னும் பல துணையினங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. ஆனால் இவை வகைப்பாட்டியல் ரீதியாக செல்லுபடியாகவில்லை.

  • பனம்புலசு பால்மரம் பெல்லாரிகசு (வரோட்டன், 1916)
  • பனம்புலசு பால்மரம் பால்மரம் (லின்னேயசு, 1766)
  • பனம்புலசு பால்மரம் பிராடி (பிளைத், 1849)
  • பனம்புலசு பால்மரம் ராபர்ட்சோனி (வரோட்டன், 1916)

தவறான துணை இனங்கள்

  • பனம்புலசு பால்மரம் பெங்கலென்சிசு (வரோட்டன், 1916)
  • பனம்புலசு பால்மரம் கொமோரினசு (வரோட்டன், 1905)
  • பனம்புலசு பால்மரம் கோசி (வரோட்டன் மற்றும் டேவிட்சன், 1919)
  • பனம்புலசு பால்மரம் கெளார்ட்டி (லேயார்ட், 1851)
  • பனம்புலசு பால்மரம் மாடுகமென்சிசு (லிண்ட்சே, 1926)
  • பனம்புலசு பால்மரம் ஒலிம்பியசு (தாமசு மற்றும் வரோட்டன், 1915)
  • பனம்புலசு பால்மரம் பென்சிலாடசு (லீச், 1814)
  • பனம்புலசு பால்மரம் ஃபேவோனிகசு (தாமசு மற்றும் வரோட்டன், 1915)

உசாத்துணை

  1. Nameer, P. O.; Molur, S. (2008). "Funambulus palmarum". IUCN Red List of Threatened Species 2008. https://www.iucnredlist.org/details/8701/0. பார்த்த நாள்: 6 January 2009. 
  2. Thorington, R.W., Jr.; Hoffmann, R.S. (2005). "Family Sciuridae". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: a taxonomic and geographic reference (3rd ed.). The Johns Hopkins University Press. pp. 754–818. ISBN 0-8018-8221-4. கணினி நூலகம் 26158608. {{cite book}}: Unknown parameter |chapterurl= ignored (help)CS1 maint: multiple names: authors list (link)
  3. http://www.boldsky.com/home-n-garden/pet-care/2007/pet-care-tips-household-squirrels.html
  4. Farmnote 113/2000, Government of Western Australia Department and Agriculture and Food, retrieved 8/14/2008 [1]
  5. REDDI, A. H., & PRASAD, M. R. N. (1968). THE REPRODUCTIVE CYCLE OF THE MALE INDIAN PALM SQUIRREL, FUNAMBULUS PENNANTI WROUGHTON, Reproduction, 17(2), 235-245. Retrieved Oct 28, 2022
  6. Human Ageing Genomic Resources, AnAge database, retrieved 7/30/2007 AnAge entry for Funambulus palmarum

வெளி இணைப்புகள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.



"https://tamilar.wiki/w/index.php?title=இந்திய_அணில்&oldid=271419" இலிருந்து மீள்விக்கப்பட்டது