இராஜபிளவு
இராஜபிளவு அல்லது இராஜபிளவை என்பது பாக்டீரியா தொற்றினால் ஏற்படும் கொதிப்புக் கொப்புளங்களின் தொகுப்பாகும், இது பெரும்பாலும் ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸ் அல்லது ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பியோஜீன்களுடன் என்னும் பாக்டீரியாத் தொற்றால் ஏற்படுகிறது. [1] இந்தத் தொற்று உடலின் பிற பகுதிகளுக்கோ அல்லது பிறருக்கோ பரவக்கூடும்; ஒரே வீட்டில் வசிப்பவர்களுக்கு ஒரே நேரத்தில் ராஜபிளவு உருவாகலாம். [2]
| இராஜபிளவு | |
|---|---|
| நீரிழிவு நோயாளியின் பிட்டத்தில் இராஜபிளவு | |
| பலுக்கல் | |
| சிறப்பு | தோல் மருத்துவம் |
அறிகுறிகள்
தோலில் ஒற்றை மயிர்கால் பகுதியில் தோற்று ஏற்பட்டுக் கொதிப்புக் கொப்பளம் தோன்றும். குறைந்தது ஐந்து தோல் மயிற்கால்களில் ஒரே நேரத்தில் கிருமித் தொற்று ஏற்பட்டு பல கொதிப்புக்க் கொப்பளங்களின் தொகுப்பாக உருவாவது ராஜபிளவு ஆகும். இது பொதுவாக சீழ் மிக்க கசிவுநீர் (இறந்த நடுவமைநாடிகள், இறந்த பாக்டீரியா மற்றும் பிற செல்லுலார் கூறுகள்) கொண்டதாக இருக்கிறது. [3] ராஜபிளவிலிருந்து திரவம் தடையின்றி வெளியேறக்கூடும், அல்லது ஒரு கீறல் மற்றும் வடிகால் செயல்முறையை ஏற்படுத்தவேண்டி இருக்கலாம். ராஜபிளவுகள் எங்கும் உருவாகலாம், ஆனால் அவை பெரும்பாலும் பின்புறம் மற்றும் பின் கழுத்தில் தோன்றும். [2]
ராஜபிளவானது தொட்டுணரக்கூடியது. இது ஒரு பட்டாணி அளவு சிறியது முதல் கோல்ஃப் பந்து அளவு வரை பெரியதாக இருக்கலாம். சுற்றியுள்ள பகுதி கடுமையானதாக இருக்கும். பின்னர், ராஜபிளவின் மையத்தில் உள்ள தோல் மென்மையாகி, புற துணைக் கொப்புளங்கள் தோன்றும்; இவை உடைந்து, சீழ் வெளியேறி, சல்லடைத் துளை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.[2][4] தொற்று ஏற்படும்போது, அரிப்பு ஏற்படலாம். தோல் எரிச்சல் இருக்கலாம், மேலும் அந்தப் பகுதியைத் தொடும்போது வலி ஏற்படலாம். சில நேரங்களில் உடல் தொற்றுநோயை எதிர்த்துப் போராடும்போது களைப்பு, காய்ச்சல், குளிர், உடல்நலக்குறைவு போன்ற கடுமையான அறிகுறிகள் ஏற்படலாம். [4]
காரணம்
இது பாக்டீரியாவால் ஏற்படும் தொற்றுகளால் ஏற்படுகிறது.
சொற்பிறப்பியல்
ராஜபிளவையை ஆங்கிலத்தில் குறிப்பிடும் கார்பன்குலஸ் (Carbuncle) என்னும் சொல் லத்தீன் மொழியிலிருந்து தோன்றியதாக நம்பப்படுகிறது. இது இரு சொற்களின சேர்கை எனப்படுகிறது. இதில் உள்ள கார்போ என்பது கார்பன்-, கார்போ அதாவது கரி அல்லது நிலக்கரி என்பதாகும். கார்பன்கிள் என்பது கல், "சிவப்பு அல்லது உமிழும் நிறத்தின் விலைமதிப்பற்ற கற்கள்", பொதுவாக கோமேதகம் என்பதாகும்.
மேற்கோள்கள்
- ↑ Ni Riain, Una (2008-12-01). "Guide to the management of bacterial skin infections" (in en). Prescriber 19 (23–24): 28–37. doi:10.1002/psb.323. பன்னாட்டுத் தர தொடர் எண்:1931-2253.
- ↑ 2.0 2.1 2.2 "Carbuncle: MedlinePlus Medical Encyclopedia". medlineplus.gov (in ஆங்கிலம்). Retrieved 2017-06-26.
- ↑ Lewis, Sharon Mantik; Dirksen, Shannon; Heitkemper, Margaret; Bucher, Linda; Camera, Ian (2015). Medical Surgical Nursing. St. Louis, Missouri: Elsevier/Mosby. p. 187. ISBN 978-0323065801.
- ↑ 4.0 4.1 "Symptoms and causes" (in en). Mayo Clinic. http://www.mayoclinic.org/diseases-conditions/boils-and-carbuncles/symptoms-causes/dxc-20214768.