இரா. நரசிம்மன்
இரா. நரசிம்மன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணியாண்மைத்துறை இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். மத்திய தொழிலாளர் கல்வி வாரியத்தின் சென்னை மண்டல வழிகாட்டுதல் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். இவர் ஜெயவதி நரசிம்மன் என்பவருடன் சேர்ந்து எழுதிய "பெற்றால் மட்டும் போதுமா?" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் கல்வியியல், உளவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.