இரா. மூர்த்தி
ஐட்ரீம் இரா.மூர்த்தி (IDream R. Murthy) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2021ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் இராயபுரம் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
ஐட்ரீம் இரா. மூர்த்தி | |
|---|---|
| உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 02 மே 2021 | |
| தொகுதி | இராயபுரம் சட்டமன்றத் தொகுதி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 09.06.1966 இராயபுரம் , சென்னை |
| தேசியம் | இந்தியர் |
| அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
| பிள்ளைகள் | ரிஷிக்கேஷ் ஸ்ரீராம், ராகுல் பிரியாதர்ஷன் |
1966 ஆண்டு ஜூன் மாதம் 09 ஆம் நாள், இராயபுரத்தில் உள்ள ஆர். எஸ். ஆர். எம். மகப்பெறு மருத்துவமனையில் பிறந்தார்.
இவர் இராயபுரத்தில் உள்ள "ஐட்ரீம் சினிமாஸ்"-இன் உரிமையாளர் ஆவார். இவருக்கு மகன் ரிஷிக்கேஷ் ஸ்ரீராம், ராகுல் என இருமகன்கள் உள்ளனர்.
சட்டமன்ற உறுப்பினராக
| ஆண்டு! 2021 | வெற்றி பெற்ற தொகுதி இராயபுரம். | திமுக கட்சி | பெற்ற வாக்குகள் | வாக்கு விழுக்காடு (%) |
|---|---|---|---|---|
| 2021 | இராயபுரம் | திமுக | 64,424 | 53.16% |
மேற்கோள்கள்
- ↑ சக்தி தமிழ்ச்செல்வன் (2021). பா. முகிலன் (ed.). 25 ஆண்டுக்கால எம்.எல்.ஏ ஜெயக்குமாரின் வெற்றியைப் பறித்த ஐட்ரீம் மூர்த்தி!. விகடன் இதழ். Archived from the original on 2021-05-06. Retrieved 2021-05-06.
- ↑ https://myneta.info/TamilNadu2021/candidate.php?candidate_id=1554